உலகப் பாரம்பரியச் சின்னமாகவும் சுற்றுலாத் தலமாகவும் விளங்கும் ஈஸ்டர் தீவில் உள்ள ஏராளமான மொய் சிலைகள் தீ விபத்தில் எரிந்து நாசமானது.
சிலியில் இருந்து சுமார் 3,500 கி.மீ தொலைவில் உள்ள இந்தத் தீவில் கட்டப்பட்ட கல் சிலைகளின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்குகிறது.
இதன் மிகப்பெரிய சிலை சுமார் 74 டன் எடையும் 32 அடி உயரமும் கொண்டது.
இந்த சிலைகள் 1400 மற்றும் 1650 க்கு இடையில் பழங்குடி ராபா-நுய் மக்களால் செதுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.
திங்கட்கிழமை ஏற்பட்ட தீயினால் தீவின் சுமார் 148 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளதுடன், தீயில் சிக்கிய சில சிலைகள் மீட்க முடியாத நிலையில் உள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.