Thursday, January 23, 2025
HomeLatest Newsஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் வெட்டிக் கொலை!

ஈஸ்டர் தாக்குதல் சந்தேக நபர் வெட்டிக் கொலை!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட நபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
நேற்று  இரவு 11 மணியளவில் மட்டக்குளிய ஹோட்டல் ஒன்றிற்கு முன்பாக இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
 
மட்டக்குளி சாவிய பதும பகுதியைச் சேர்ந்த மொஹமட் பதுர்தீன் மொஹமட் ஃபர்ஹான் (வயது 38) என்பவரே வாகனத்தில் வந்த சிலர் கூரிய ஆயுதங்களால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
 
வெட்டியதில் பலத்த காயங்களுக்குள்ளான நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போது உயிரிழந்துள்ளார்.
 
உயிரிழந்த நபர் ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் கைது செய்யப்பட்டு விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.  
 
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மட்டக்குளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Recent News