Saturday, January 25, 2025
HomeLatest NewsWorld Newsநாட்டை உலுக்கிய நிலநடுக்கம் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !!!

நாட்டை உலுக்கிய நிலநடுக்கம் விடுக்கப்பட்ட சுனாமி எச்சரிக்கை !!!

தென் அமெரிக்க நாடான பெருவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டு ரிக்டரில் இந்த நிலநடுக்கம் 7.2 ஆக பதிவாகியுள்ளது நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.நிலநடுக்கத்தின் போது பதிவான சிசிடிவி காட்சி அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. வீடியோவில் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்ட கார் பூமியோடு சேர்ந்து குலுங்கும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

இதே போன்று வீட்டினுள் இருந்த மின்விளக்குகள் நிலநடுக்கத்தால் குலுங்கின. இது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.காராவெலியிலே ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக மலையில் இருந்த பாறைகள் சரிந்து பான்-அமெரிக்க நெடுஞ்சாலையில் விழுந்தன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது

Recent News