Monday, December 23, 2024
HomeLatest NewsIndia Newsஇந்தியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்..!தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!

இந்தியாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம்..!தேசிய நில அதிர்வு மையம் தகவல்..!

மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் இன்று அதிகாலையில் திடீரென நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

அத்துடன், இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 3.3 ஆக பதிவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உக்ருல் மாவட்டத்திற்கு மேற்கு தென்மேற்கில் 13 கிலோ மீட்டர் தூரத்தில் அதிகாலை 12.14 மணியளவில் 70 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.

மேலும், இதனால் ஏற்பட்ட சேதம் தொடர்பான விவரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

Recent News