Tuesday, December 24, 2024
HomeLatest Newsசீனாவில் நிலநடுக்கம்:65 பேர் உயிரிழப்பு!

சீனாவில் நிலநடுக்கம்:65 பேர் உயிரிழப்பு!

சீனாவில் ஏற்பட்ட நில நடுக்கத்தில் சிக்குண்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 65 ஆக உயர்வடைந்துள்ளது.

குறித்த நில நடுக்கத்தில் 50 யிற்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதுடன் 16 பேர் காணாமல் போயுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

சீனாவின் தென்மேற்கு பகுதியின் sichuan மாகாணத்தில் 6 தசம் 6 ரிக்டெர் அளவில் நேற்று இவ்வாறு நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிவையில் sichuan மாகாணத்தின் சில பகுதிகளில் வீதிகள் மற்றும் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், 2017 ஆம் ஆண்டுக்குப் பின்னர் sichuan மாகாணத்தில் ஏற்பட்ட மிக பாரிய நிலடுக்கம் இதுவாகுமென சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

Recent News