நேற்றைய தினம் ஆப்கானிஸ்தானில் இரு தடவைகள் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. ஒரே நாளில் ஙாலையிலும் மாலையிலும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையானது மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.
நேற்று காலை ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கமானது டெல்லி , பஞ்சாப் , ஹரியானா , ஜம்மு கஸ்மீர் உட்பட அண்மித்த பிரதேசங்களிலும் உணரப்பட்டுள்ளது.
நேற்று மலை 6.26 மணியளவில் 4.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
இதை தேசிய நில அதிர்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது. எது எவ்வாறாயினும் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை.
கடந்த பெப்ரவரி மாதம் துருக்கி மற்றும் சிரியாவில் தொடர்ந்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இதில் 55 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் பலியானதுடன் பல்லாயிரக்கணக்கான பெறுமதியுடைய சொத்துக்களும் சேதமானது. இத்துடன் மிக மோசமான நிலநடுக்கங்களில் ஒன்றாகவும் பதிவானது.
உள்நாட்டுப் போரில் இருந்து மீண்டு தலிபான்களிடம் சிக்கித் தவிர்க்கும் நிலையில் இந் நிலநடுக்கமானது மேலும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.