Tuesday, December 24, 2024
HomeLatest News7 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கும் பூமி: வானியல் அறிஞர்கள் கணித்து கூறியது என்ன?

7 நிமிடங்களுக்கு இருளில் மூழ்கும் பூமி: வானியல் அறிஞர்கள் கணித்து கூறியது என்ன?

2023ஆம் ஆண்டில் 7 நிமிடங்கள் பூமி இருளில் மூழ்கும் என வானியல் அறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒவ்வொரு ஆண்டின் தொடக்கத்திலும் வானியல் அறிஞர்களால் கணிக்கப்படும் நிகழ்வுகள் தான் இந்த கிரகண நிகழ்வுகள் தான்.

இந்நிலையில், 2023ஆம் ஆண்டு மொத்தம் 4 கிரகணங்கள் ஏற்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, 2 சூரிய கிரகணங்கள், 2 சந்திர கிரகணங்கள் நிகழ உள்ளது.

ஆண்டின் முதல் கிரகணம்

2023ஆம் ஆண்டின் முதல் கிரகணம் சூரிய கிரகணமாக இருக்கும். இது 20 ஏப்ரல் 2023 அன்று நிகழும்.

பஞ்சாங்கத்தின் படி, இந்த சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.04 முதல் மதியம் 12.29 வரை இருக்கும். இந்த கிரகணம் இந்தியாவில் காணமுடியாது.

இரண்டாவது கிரகணம்

2023ஆம் ஆண்டின் இரண்டாவது கிரகணம் சந்திர கிரகணம் ஆகும், இது மே 5, 2023 வெள்ளிக்கிழமை அன்று நிகழும்.

இந்த கிரகணம் இரவு 8.45 மணி முதல் நள்ளிரவு 1.00 மணி வரை நீடிக்கும். இந்த கிரகணம் ஒரு நிழல் சந்திர கிரகணம் ஆகும்.

மூன்றாவது கிரகணம்

2023ஆம் ஆண்டின் மூன்றாவது கிரகணம் சூரிய கிரகனமாகும்.

இது 2023ம் ஆண்டின் கடைசி சூரிய கிரகணமாகவும் இருக்கும். அக்டோபர் 14, 2023 சனிக்கிழமை அன்று நிகழும் இந்த கிரகணம் இந்தியாவில் தெரியாது.

இது மேற்கு ஆப்பிரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா, அட்லாண்டிகா மற்றும் ஆர்க்டிக் பகுதிகளில் தென்படும்.

நான்காவது கிரகணம்


2023ஆம் ஆண்டின் நான்காவது கிரகணம் சந்திர கிரகணமாக இருக்கும்.

இந்த சந்திர கிரகணம் 29 அக்டோபர் 2023 இரவு 1:06 முதல் இரவு 2:22 வரை நீடிக்கும். ஆண்டின் இரண்டாவது சந்திர கிரகணம் இந்தியாவில் தெரியும்.

Recent News