Monday, December 23, 2024
HomeLatest Newsஇலங்கை வாழைப்பழத்தில் கண் வைத்த டுபாய்!

இலங்கை வாழைப்பழத்தில் கண் வைத்த டுபாய்!

இலங்கையில் இருந்து முதல் தொகுதி  வாழைப்பழம் நேற்று  டுபாய்க்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்தநிலையில் முதன்முறையாக இராஜங்கனை பிரதேசத்தில் 500 ஏக்கரில் பயிரிடப்பட்டுள்ள கதலி வாழைகள் வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக  விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.

இதன்படி, 12,500 கிலோகிராம்   வாழைப்பழங்கள் டுபாய்க்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.

மேலும் வாழைப்பழ ஏற்றுமதி மூலம் நாடு வாரத்திற்கு 10,000 அமெரிக்க டொலர் வருமானத்தை ஈட்ட எதிர்பார்க்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

Recent News