Thursday, January 23, 2025
HomeLatest Newsவெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு ; தற்காலிகமாக மூடப்பட்ட மாளிகை வளாகம்….!

வெள்ளை மாளிகையில் போதைப்பொருள் கண்டுபிடிப்பு ; தற்காலிகமாக மூடப்பட்ட மாளிகை வளாகம்….!

அமெரிக்கா அதிபரின் வெள்ளை மாளிகையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட.வெண்ணிறத் தூள் கொக்கைன் பேதைப்பொருளென வாஷிங்டன் தீயணைப்புப் பிரிவு அடையாளம் கண்டுள்ளது.

அமெரிக்கா அதிபர் வசித்து வரும் நிர்வாக மாளிகையுடன் அமைந்துள்ள கட்டடத்திலிருந்தே கண்டெடுக்கப்பட்டது. அந்தக் கட்டடத்தில் ஓவல் அலுவலகம் , அமைச்சரவை அறை என்பவற்றுடன் செய்தியாளர் பகுதி என்பனவும் அமைந்துள்ளது.

இதேவேளை குறித்த அடையாளம் தெரியாத பொருளை இனங்கண்ட பின் வெள்ளைமாளிகை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. எனினும் அது அபாயமற்ற பொருளாக அடையாளப்படுத்தப்பட்டுள்ளதுடன் அந்தப் பொருள் எட்வாறு அவ்விடத்திற்கு வந்தது தொடர்பான விசாரணைகள் நடாத்தப்பட்டு வருவதாக தீயணைப்புத் துறை இரகசியப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இதேவேளை ஞாயிற்றுக்கிழமை அமெரிக்கா அதிபர் ஜோபைடன் வெள்ளை மாளிகையில் இல்லை என்பது சுட்டிக்காட்டத்தக்கது.

Recent News