டிமென்ஷியா மற்றும் அல்சைமர் எனப்படும் மூளை செல்களை அழிக்கும் நோயைக் கட்டுப்படுத்தக்கூடிய மருந்து முதல் முறையாக வெற்றிகரமான முடிவுகளைக் காட்டியுள்ளது.
குறித்த மருந்துக்கு lecanemab என்று பெயரிடப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த மருந்தினால் அழிக்கப்பட்ட மூளை செல்கள் மீட்கப்படுவதை இதுவரை மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் உறுதி செய்துள்ளன.
அல்சைமர் நோய் அல்லது டிமென்ஷியா தற்போது உலகம் முழுவதும் பரவலாக வளர்ந்து வருவதாக அறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இந்நிலையால் அவதிப்படுபவர்கள் நினைவாற்றலை இழக்கிறார்கள், இதற்கு இதுவரை எந்த ஒரு வெற்றிகரமான மருந்தும் தயாரிக்கப்படவில்லை.