Sunday, December 29, 2024
HomeLatest Newsஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி!

ஐரோப்பாவில் வரலாறு காணாத வறட்சி!

ஐரோப்பாவில் பல வாரங்களாக தொடரும் கடும் வறட்சி மக்களை வாட்டி வதைக்கிறது.

இந்நிலையில்,வேறு வழியில்லாமல் மக்கள் தங்கள் இடங்களில் இருந்து வெளியேறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.

ஐரோப்பாவின் ஏரிகள் மற்றும் ஆறுகள் வறண்டு போனதால், கப்பல் போக்குவரத்தும் சரக்கு போக்குவரத்தும் பாதிக்கப்பட்டுள்ளது. நீர்நிலைகளில் நீர் மட்டம் குறைந்து மூழ்கிய கிராமங்களும் கப்பல்களும் அரிய பொருட்களும் வெளிவந்துள்ளன.

மேலும்,ரைன் நதியில் உள்ள “hunger stones” வெளியாகின. இவை, முந்தைய வறட்சியின் போது ஆற்றின் ஓரத்தில் இருந்த கற்களில் செதுக்கப்பட்டவை, இந்த கற்கள் தண்ணீருக்கு மேலே இருக்கும்போது அவர்களுக்கு சிரமம் ஏற்படும் என்று எதிர்கால சந்ததியினருக்கு எச்சரிப்பதற்காக இந்த ஏற்பாடு செய்யப்பட்டது.

Recent News