செங்கடலில் வணிக கப்பல் போக்குவரத்து மீது ஹூதி கிளர்ச்சியாளர்கள் வழக்கமான தாக்குதல்களை நடத்தி வரும், ஏமன் கடற்கரையில் ஒரு கப்பல் அருகே ஆளில்லா விமானம் தாக்குதல் நடத்தியுள்ளது.
சலீஃப் துறைமுகத்திற்கு தென்மேற்கே 45 கடல் மைல் (83 கிமீ) தொலைவில் உள்ள பாப் எல்-மண்டப் ஜலசந்தியில் ஒரு கப்பலுக்கு அருகே விமானம் வெடித்ததாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கை (UKMTO) நிறுவனம் சனிக்கிழமை தெரிவித்துள்ளது.
“கப்பலுக்கு எந்த சேதமும் ஏற்படவில்லை என்பதோடு, அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்,” என்று யுகேஎம்டிஓ ஒரு ஆலோசனைக் குறிப்பில் தெரிவித்துள்ளது.
UKMTO தாக்குதலுக்குப் பின்னால் யார் என்று குறிப்பிடவில்லை. ஆனால் யேமனின் பெரும்பகுதியைக் கட்டுப்படுத்தும் ஹூதிகள், காசாவில் நடந்த போருக்குப் பதிலடி கொடுக்கும் வகையில் பிராந்தியத்தில் வணிகக் கப்பல்கள் மீது வழக்கமான ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இந்த தாக்குதல் முயற்சியும் ஏமன் ஹூதி கிளர்ச்சியாளர்களால் மேற்கொள்ளப்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகின்றது.