Wednesday, December 25, 2024
HomeLatest NewsIndia Newsவரதட்சணை வழக்கு!பெருந்தொகை பணத்தை 7 மூட்டையில் நாணயங்களாக வழங்கிய கணவன்..!வியந்த நீதிபதி..!

வரதட்சணை வழக்கு!பெருந்தொகை பணத்தை 7 மூட்டையில் நாணயங்களாக வழங்கிய கணவன்..!வியந்த நீதிபதி..!

வரதட்சணை வழக்கில் மனைவியின் பராமரிப்பு செலவிற்காக பெருந்தொகை பணத்தினை சில்லறையாக வழங்கியமை நீதிமன்றத்தையே வியக்க வைத்துள்ளது.

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த தஷ்ரத் குமாவாத் என்பவவரிற்கும் சீமா என்ற பெண்ணிற்கும் சுமார் 10 வருடங்களிற்கு முன்னர் திருமணம் நடந்துள்ள நிலையில், சில வருடங்கள் கழித்து சீமா தனது கணவர் வரதட்சணை கேட்டு துன்புறுத்துவதாக வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதையடுத்து, இந்த வழக்கை விசாரித்த ஜெய்பூராஸ் கூடுதல் மாவட்ட நீதிமன்றம், மனைவியின் பராமரிப்பு செலவிற்காக 2.25 லட்சம் ரூபாயை தஷ்ரத் குமாவாத் வழங்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ஆயினும், இந்த தொகையை தஷ்ரத்தால் செலுத்த முடியாத காரணத்தால் அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளதுடன் இந்த வழக்கும் தொடர்ந்து நீதிமன்றத்தில் நடைபெற்று வருகின்றது.

இதனால், சிறையில் அடைக்கப்பட்டுள்ள தஷ்ரத்தின் உறவினர்கள் அவரை வெளியில் கொண்டு வருவதற்கு முயற்சி செய்துள்ளதுடன் சிறிது சிறிதாக சேர்த்த பணத்தை முதல் தவணையாக நீதிமன்றத்தில் செலுத்த தொடங்கியுள்ளனர்.

முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாய் பணத்தை ஏழு பெட்டிகளில் அவர்கள் கொண்டு சென்ற நிலையில் வியப்படைந்த நீதிபதி இவை என்ன? என்று வினாவ, தாம் தஷ்ரத்தின் உறவினர்கள் என்றும் அவர் கட்ட வேண்டிய பணத்தில் முதல் தவணையாக 55 ஆயிரம் ரூபாயை 7 பெட்டிகளில் 280 கிலோ எடையுடன் கொண்டு வந்ததாகவும் கூறியுள்ளனர்.

இதையடுத்து, பணத்தை எண்ணி சரி பார்க்குமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

55 ஆயிரம் ரூபாயும் ஒரு ரூபாய், இரண்டு ரூபாய், ஐந்து ரூபாய் நாணயங்களாக காணப்பட்டமையால் நாணயங்களாக வழங்குவது மனிதாபிமானமற்ற வகையிலான பழி வாங்கும் செயல் என்று சீமாவின் வழக்கறிஞர் நீதிமன்றத்தில் குற்றம்சாட்டியுள்ளார்.

ஆயினும், தஷ்ரத் சார்பில் ஆஜரான வக்கீல், நாணயங்கள் அனைத்தும் செல்லத்தக்க இந்திய பணங்கள் என்று எதிர்த்து கூறியுள்ளார்.

Recent News