Wednesday, April 2, 2025
HomeLatest Newsமலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓடி சாகசம் - 6 நிமிடம் 2 வினாடிகளில்...

மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓடி சாகசம் – 6 நிமிடம் 2 வினாடிகளில் அசத்திய வீரர்..!

மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓடும் போட்டியில் 100 வீரர்கள் பங்கேற்று தமது சாகசத்தை வெளிப்படுத்தியுள்ளனர்.

தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் மலையின் உச்சியிலிருந்து கீழ்நோக்கி சைக்கிள் ஓட்டும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.

எல்பாஸ் நகரில் நடைபெற்ற போட்டியில் 100 வீரர்கள் பங்கேற்று தங்களது திறனை வெளிப்படுத்தி அனைவரையும் திகைப்படைய செய்துள்ளனர்.

மலையிலிருந்து கீழே இறங்கும் வழியில் அமைக்கப்பட்டிருந்த பல்வேறு தடைகளை தாண்டி வீரர்கள் பந்தய இலக்கை நோக்கி சைக்கிளை ஓட்டிச் சென்றுள்ளனர்.

இதில், சிலர் கீழே விழுந்த போதும் ரசிகர்கள் ஆங்காங்கே இருந்து வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளனர்.

பந்தய தூரமான சுமார் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்தை அந்நாட்டின் வீரர் பிராங்ளின் 6 நிமிடம் 2 வினாடிகளில் கடந்து அதில் வெற்றி பெற்றுள்ளார்.

Recent News