Thursday, January 23, 2025
HomeLatest Newsஇந்திய அணியை வெறுக்காதீர்கள் - சச்சின் கோரிக்கை

இந்திய அணியை வெறுக்காதீர்கள் – சச்சின் கோரிக்கை

ரி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டின் அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்திடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது குறித்து பல்வேறு தரப்பினரும் விமர்சித்து வருகின்றனர்.

இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், இந்திய அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உண்டு. அதுபோல வாழ்க்கைக்கும் இரண்டு பக்கங்கள் உண்டு. நம் அணியின் வெற்றியை நம் சொந்த வெற்றியைப் போல் கொண்டாடும்போது, நம் அணியின் தோல்வியையும் நாம் ஏற்றுகொள்ள வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் பிரபல ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கான் வெளியிட்டுள்ள இன்ஸ்டாகிராம் பதிவில், வெற்றி தோல்வி என்பது விளையாட்டின் ஒரு அங்கம் என தெரிவித்துள்ளார்.

முன்னெப்போதையும்விட வலுவாகவும் சிறப்பாகவும் திரும்பி வருவோம் எனவும் அவர் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

Recent News