Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅழாதீங்க Bro! கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்திய பூனை...வைரலாகும் வீடியோ

அழாதீங்க Bro! கண்ணீரைத் துடைத்து ஆறுதல் படுத்திய பூனை…வைரலாகும் வீடியோ

அழுதுகொண்டிருந்த தனது உரிமையாளருக்கு பூனை ஒன்று ஆறுதல் தெரிவித்த வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவுகிறது. விலங்குகளின் இந்த அன்பான மனது மனிதர்களுக்கு கூட வராது என்று பலர் கூறுகிறார்கள்.

வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் என்றால் எப்போதும் அன்பு நிறைந்தவையாக உள்ளன. முக்கியமாக நாம் செல்லப்பிராணிகள் மீது வைத்திருக்கும் அன்பை விட அவைகள் நம்மீது வைத்திருக்கும் அன்பு மிகவும் அதிகம்.

இதனை உணர்த்த பல வீடியோக்கள் இணையத்தில் உள்ளன. அதில் ஒரு வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

இந்த வீடியோவில் பூனை ஒன்று அழுதுகொண்டிருக்கும் தனது உரிமையாளருக்கு ஆறுதல் கூறுகிறது.

தனது உரிமையாளரின் கண்களை துடைத்துவிட்டு அவருக்கு ஆறுதலாக அவரை அணைக்கிறது. இந்த வீடியோ மிகவும் உணர்ச்சிபூர்வமாக உள்ளது.

இதை பார்த்து பலர் மகிழ்ந்து வருகிறார்கள். அமைதியானவையாக கருதப்படும் பூனைகள் இவ்வாறு அன்பை பொழியும் என்று பலர் எதிர்பார்க்கவில்லை. இதனை இதுவரை 2.2 மில்லியன் பார்வையாளர்கள் பார்வையிட்டுள்ளனர்.

Recent News