யாழ் ஸ்ரீநாகவிகாரையில் இன்றைய தினம் வெசாக் பூசை வழிபாடும் விகாராதிபதிகளுக்கு தானம் வழங்குதலும் நடைபெற்றது.
இந்நிகழ்வானது கலாநிதி சிதம்பரம் மோகன் தலைமையில் நடைபெற்றதுடன் இந்தியத் துணை தூதுவர் ராக்கேஸ் நட்ராஜ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.
மேலும் இந்நிகழ்வில் பௌத்த ,இந்து,மதத்தலைவர்களும் கலந்துகொண்டு தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர்.
அவர்கள் தெரிவித்ததாவது ;
வைகாசி மாதத்தில் வருகின்ற பௌர்ணமி தினத்தன்று வெசாக் தினம் கொண்டாடப்படுகிறது. சைவசமயத்திலே தோன்றிய புத்த பெருமான் பௌத்த மதம் என்ற மார்க்கத்தினை தோற்றிவித்திருந்தார்.அதுவே பௌத்த மாதமாகும்.இம்மதம் உயர்ந்த போதனைகளை சொல்லுகிறது.
அந்தவகையில் இந்து ,பௌத்த மதத்தலைவர்கள் அனைவரும் நாட்டில் தர்மங்களை நிலைநாட்ட வேண்டும்.,பஞ்சம்,பசி,கொலை இல்லாத நாடாக மாற்ற வேண்டும்.தற்போது நாடு பஞ்சம்,பசி,கடன் என தவிக்கின்றது இதற்கு கடவுளை வேண்டுவதைத் தவிர வேறு வழி இல்லை. மற்றும் நிரந்தரமான அமைதியினை நிலைநாட்டுகின்ற முயற்சியில் ஈடுபட வேண்டும்.
நாட்டினுடைய மக்கள் அனைவருக்கும் அன்பு,சமாதானம் ஆகியவற்றை போதித்து மேன்மைப் படுத்த வேண்டும்.நாட்டு மக்கள் அனைவரையும் நேசிக்க வேண்டும் என்ற போதனையையும் மதத்தலைவர்கள் போதிக்க வேண்டும் என்றனர்.