Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅனைவரையும் அசர வைக்கும் டொல்பின் துறைமுகம்..!

அனைவரையும் அசர வைக்கும் டொல்பின் துறைமுகம்..!

துறைமுகம் ஒன்று டொல்பினின் தலை போன்று அழகாக காட்சியளிப்பது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

இந்த துறைமுகம் இங்கிலாந்தில் காணப்படுகின்றது. இதன் புகைப்படமும் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வைரலாகி வருகின்றது.

அதனுடைய புகைப்படம் மே மாதத்தின் ஆரம்பத்தில் டிரோன் எனப்படும் ஆளில்லா விமானம் மூலம் எடுக்கப்பட்டுள்ளது.

துறைமுகத்தின் அழகிய புகைப்படத்தை எடுத்த புகைப்படக் கலைஞர் ரய் ஜோன்ஸ் என்பவர் தனது பேஸ்புக் பக்கத்தில் குறித்த புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.

அதன் பொழுது அவர், “இங்கிலாந்தில் உள்ள அந்த துறைமுகத்திற்கு நாம் பலமுறை சென்றிருந்த போதிலும் தனித்தன்மை வாய்ந்த அதன் வடிவத்தை இதற்கு முன்னர் நாம் ஒரு பொழுதும் கண்டிருக்க மாட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி அனைவரையும் வியக்க வைத்து வருகின்றது.

Recent News