பார்வையை இழந்த இளைஞர் ஒருவர், 30 கிலோமீட்டர் அகலமான நீரிணை ஒன்றை நீந்திக் கடந்து சாதனை படைக்கவுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தைச் சேர்ந்த ஸ்கொட் ரீஸ் என்ற இளைஞரே இந்த சாதனை முயற்சியில் இறங்கியுள்ளார்.
அந்த வகையில், குறித்த சாதனை படைப்பதற்காக சில மாதங்களாக அதற்காக பயிற்சியில் ஈடுபட்டு ஈடுபட்டு வருகின்றார்.
ஸ்கொட் ரீஸ், பிறக்கும் போதே ஏற்பட்ட ஓர் குறைபாடு காரணமாக சுமார் 20 வயதளவில் தனது பார்வையை இழந்துள்ளார்.
எனினும் கடுமையான முயற்சி காரணமாக வான்கூவார் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா ஆகியனவற்றை இணைக்கும் ஜோர்ஜியா நீரிணையை கடக்கவுள்ளார்.
இதன் மூலம், பார்வையற்றோருக்கான கனடிய வழிகாட்டி நாய்களுக்கு விழிப்புணர்வையும் நிதியையும் திரட்டும் நம்பிக்கையிலுள்ளார்.
இது குறித்து ஸ்கொட் ரீஸ், தனது செல்லப்பிராணியான நாய் தனது முயற்சிக்கு பல்வேறு வழிகளில் உதவுவதாகவும், பார்வை இல்லை என்ற குறை அதனால் நீங்கி விட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தன்னை,பல்வேறு இடங்களிற்கு அது மிகவும் பாதுகாப்பாக அழைத்துச் செல்வதாகவும் கூறியுள்ளார்.
எல்லாம் சரியாகி, நீர் அமைதியாக இருந்தால், 10 மணி நேரத்தில் கடக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.