Friday, January 24, 2025
HomeLatest Newsதூக்கம் குறைந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

தூக்கம் குறைந்தால் உடல் எடை அதிகரிக்குமா?

தூக்கத்திற்கும் உடல் எடைக்கும் சம்பந்தம் உண்டா? குறைவான தூக்கம் இருந்தால் உடல் எடை அதிகரிக்குமா? என்பது குறித்து தற்போது பார்ப்போம்

ஒவ்வொரு மனிதனுக்கும் குறைந்தது 8 மணி நேரம் தூக்கம் அவசியம் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சரியாக தூக்கம் இல்லாதவர்களுக்கு உடல் எடை அதிகரிக்கும் என்றும் குறிப்பாக ஆண்களை விட பெண்கள் குறைவான நேரம் தூங்கினால் அதிக உடல் எடை அதிகரிக்க்கும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் 

கவலை, மன அழுத்தம் ஆகியவை இருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும் என்று முன்னோர்கள் தெரிவித்துள்ளனர். தினமும் 7 மணி நேரம் முதல் 9மணி நேரம் வரை தூங்கும் பெண்களை விட குறைவாக தூங்கும் பெண்களுக்கு உடல் எடை அதிகரித்து இருப்பதாக சமீபத்திய ஆய்வு கட்டுரை ஒன்று தெரிவித்துள்ளது.

இரவு நன்றாக தூங்கினால்தான் அடுத்த நாள் வேலை செய்ய தகுந்த ஆற்றல் கிடைக்கும் என்பதால் தூங்குவதை சரியாக திட்டமிட வேண்டும் என்றும் தூங்கும் முறையையும் சரி செய்து கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர் .

எனவே உடல் எடை அதிகரிப்பதற்கு குறைவான தூக்கமும் ஒரு காரணம் என்பதை அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

பிற செய்திகள்

Recent News