Thursday, January 23, 2025
HomeLatest Newsஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? அப்போ இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க!

ஆண்களின் விந்தணு உற்பத்தியை வேகமாக அதிகரிக்கனுமா? அப்போ இந்த உணவுகளை உடனே சாப்பிடுங்க!

விந்தணுக்கள் எண்ணிக்கை குறைபாடுள்ள ஆண்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.விந்தணுக்களின் எண்ணிக்கை கருவுறுதலில் முக்கிய பங்கு வகிக்கிறது.இது பிறக்கும் போதே ஆண்களுக்கு உண்டாகும் பிரச்சினை அல்ல.

ஆண்கள் அன்றாட வாழ்விலும் உணவு முறையில் ஏற்படுத்தி கொண்ட அதிக படியான மாற்றங்களே இப்படி திடீர் விந்தணுக்கள் குறைபாட்டுக்கு மிகப்பெரிய காரணம்.

எனினும் சில உணவு முறைகளை பின்பற்றுவதன் மூலம் விந்தணு எண்ணிக்கையை அதிகரிக்க முடியும் என்று ஆயுர்வேதம் கூறுகின்றது.


விந்தின் தராதரத்தை நிர்ணயிப்பதில் இரண்டு முக்கியக் காரணிகள் உள்ளன.

  • உருவம்
  • அசைவு

ஆண் மலட்டுத்தன்மைக்குக் காரணமாவதில், விந்தின் வடிவத்துக்கும் முக்கியப் பங்கு உண்டு. அது சரியான வடிவத்தில் இல்லையென்றால், கருவுறுதலுக்குப் பயன்படாது. அதேபோல, பெண்ணின் கருமுட்டையைச் சென்று சேரப் போதுமான வேகம் விந்துக்கு இருக்க வேண்டும்.

அப்போதுதான் கருவுறுதல் முறையாக நடக்கும். இந்த அசைவும் இயக்கமும் சீராக இல்லையென்றால் விந்து கர்ப்பப்பையை நோக்கிச் செல்லத் தடுமாறும்.

சரியாக கருமுட்டையை சென்றடையாது இதனாலும் கருவுறுதல் நிகழாமல் போகலாம்.

இனி விந்தின் உருவத்தை முழுமையாக்கி இயக்கத்தைச் சீராக்கும் உணவுகள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

விந்தணுக்கள் எண்ணிக்கையை அதிகரிக்கும் உணவுகள்

தக்காளி

தக்காளி லைக்கோபின் நிறைந்தது. தினசரி உணவில் தக்காளி சேர்த்துக்கொள்வது ஆண்மை தன்மைக்கு உரமூட்டும்.

தக்காளியைப்போலவே திராட்சை, தர்பூசணி, சிவப்பு கொய்யா, தண்ணீர்விட்டான் கிழங்கு, பப்ளிமாஸ், சிவப்பு முட்டைக்கோஸ், துளசி ஆகியவையும் லைக்கோபின் சத்து நிறைந்தவை. எனவே இவற்றை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளுங்கள்.

பாதாம்

பாதாமில் ஒமேகா 3 கொழுப்பு அமிலம் உள்ளது. இது விந்தின் வடிவத்துக்கும் இயக்கத்துக்கும் உதவக்கூடியது.

தினமும் 75 கிராம் அல்லது ஒரு கைப்பிடி பாதாம் பருப்பு சாப்பிடுவது விந்தணுவை பலம்பெறச் செய்யும்.

பூசணி

ஆண்களின் விந்தணுக்களின் சீரான வளர்ச்சிக்கு பூசணி விதையில் உதவி புரிகின்றது. எச்சரிக்கை, பூசணி விதைகளை அதிகமாகச் சாப்பிடுவது விந்தில் பாதிப்பையும் உண்டாக்கலாம். இதை அளவோடு உணவில் சேர்த்துக்கொள்ளுங்கள்.

அவகேடோ

அவகேடோவில் இருக்கும் வைட்டமின் இ, விந்தணுவின் இயக்கத்திற்கு உதவக்கூடியது.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் வைட்டமின் சி மற்றும் வைட்டமின் ஏ போன்ற முக்கிய ஊட்டச்சத்து உணவுகள் உள்ளன. இது விந்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மட்டுமல்லாமல் விந்தணுக்களின் தரத்தையும் மேம்படுத்துகிறது.

மாதுளை

மாதுளை ஆண்களின் விந்தணு எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் துணை புரிகிறது. மாதுளைப் பழத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. அதனால் விந்தணுக்களின் வளர்ச்சியில் சேதம் ஏற்படுவதை தடுக்கின்றன.

முக்கிய குறிப்பு

இதையெல்லாம் தொடர்ந்து கடைப்பிடித்தாலும் ஒரே நாளில் எல்லாம் சரியாகிவிடும் என்று நினைக்க கூடாது. சீரான உடற்பயிற்சி , முறையான வாழ்க்கை முறை ஆகியவையே குழந்தைப்பேறுக்கு உதவும்.

எல்லாவற்றையும் விட மருத்துவ ஆலோசனை என்பது மிகவும் அவசியம்.

Recent News