பிட்டனிலுள்ள வைத்தியர்கள் தங்களுக்கு 35 சதவீத சம்பள உயர்வை.வழங்க வேண்டுமென அரசுடன் பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர்.
குறித்த பேச்சுவார்த்தை உடன்பாட்டு நிலையை எட்டாததால் கடந்த பல மாதங்களாகத் தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந் நிலையில் போராட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கும் காலப்பகுதியில் எந்தவிதத்திலும் பேச்சு வார்த்தையை நடாத்தப் போவதில்லை என அரசு அறிவித்துள்ளது.
கொரோனா தொற்று , பிரெக்சிட் அமைப்பிலிருந்தான வெளியேற்றம் மற்றும் லகளவிலான பொருளாதார நெருக்கடியால் பாதிப்புக்குள்ளாகும் நாட்டில் ஊழியர்களுக்கான சம்பளத்தைஅதிகரிக்கும தருணம் நாட்டில் பண வீக்கம் ஏற்பட்டு நாடு மேலும் இடருக்குள்ளாகுமெனப் பொருளாதார நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
இதேவேளை இள நிலை வைத்தியர்களின் போராட்டத்தின் தாக்கத்தால் நோயாளிகள் முறையான சிகிச்சைகளைப் பெற முடியாதவாறு பல இன்னல்களை எதிர்கொள்கின்றனர்.
இதனையடுத்த முதலாம் ஆண்டு வைத்தியர்களுக்கு 10.3 சதவீதமும் இளநிலை வைத்தியர்களுக்கு 8.8 சதவீதமும் மருத்ளுவ ஆலோசகர்களுக்கு 6 சதவீதமுமென சம்பள உயர்வைவழங்க அரசு அறிவித்துள்ளது.
இதனால் சம்பள உயர்வுடன் நாட்டின் பண வீக்கமும் கட்டுப்பாட்டிலிருக்குமென எதிர்பார்க்கப்படுகின்றது. இதனால் ஒன்றரை இலட்சத்திற்கு அதிகமான வைத்தியர்கள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.