மக்கள் கோவிட் தடுப்பூசியை பெற்றுக்கொள்ள ஆர்வம் காட்டுவதில்லை என தொற்று நோய் விஞ்ஞான பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சமித கினிகே தெரிவித்துள்ளார்.
இதன் விளைவுகளை மக்கள் எதிர்நோக்க நேரிடும் என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
60 வயதை கடந்தவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கோவிட் காரணமாக நோய் நிலைமைகள் அதிகரித்தல் மற்றும் மரணங்கள் ஏற்படக்கூடிய சாத்தியங்கள் அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எதிர்வரும் டிசம்பர் மாதத்துடன் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றத்தினால் மீண்டும் கோவிட் வேகமாக பரவும் எனவும் இது 60 வயதிற்கு மேற்பட்டவர்களை பாதிக்கும் எனவும் தெரிவித்துள்ளார்.