Monday, January 20, 2025
HomeLatest Newsஇலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்; வைத்தியத்துறை முடங்கும் அபாயம்! – GMOA

இலங்கையை விட்டு வெளியேறும் வைத்தியர்கள்; வைத்தியத்துறை முடங்கும் அபாயம்! – GMOA

நாட்டை விட்டு வெளியேறும் வைத்தியர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) இது தொடர்பான அறிவித்தலை வெளியிட்டுள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடி காரணமாக இவ்வாறு வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறும் போக்கு காணப்படுவதாக குறிப்பிடப்படுகின்றது.

வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறினால் சுகாதார சேவைக்கு கடுமையான அழுத்தங்கள் ஏற்படும் என சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் மருத்துவர் சமில் விஜேசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியினால் அத்தியாவசிய மருந்துகள் இன்மையால் பொதுமக்கள் ஏற்கனவே கடுமையான சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

சில வைத்தியசாலைகளில் சத்திரசிகிச்சைகள் பல நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நாட்டை விட்டு வைத்தியர்கள் பெருமளவில் வெளியேறுவதென்பது பொதுமக்களை இன்னும் நெருக்கடிக்குள்ளாக்கும் என்பதோடு, வைத்தியத்துறை முடங்கும் அபாய நிலைக்கு தள்ளப்படும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News