Thursday, January 23, 2025
HomeLatest Newsசன்னி லியோனுக்கு தமிழில் பிடித்த நடிகர் யார் தெரியுமா?

சன்னி லியோனுக்கு தமிழில் பிடித்த நடிகர் யார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையான சன்னி லியோன்( Sunny Leone) தமிழில் தனக்கு பிடித்த நடிகர் யார் என்பது குறித்து கூறியுள்ளார்.

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருபவர் நடிகை சன்னி லியோன்.

பாலிவுட் படங்களில் கவர்ச்சி கதாப்பாத்திரம் மற்றும் ஐட்டம் பாடல்களுக்கு நடனமாடி வருகிறார். அதுமட்டுமின்றி யூட்யூப் சேனலையும் நடத்தி வரும் சன்னி லியோன் அதன்மூலமும்கலைகட்டி வருகிறார்.

இந்நிலையில் தமிழ் சினிமாவில் தற்போது ஓ மை கோஸ்ட் என்ற படத்தில் நடித்துள்ளார் .காமெடி ஹாரர் படமான இப்படத்தில் சன்னி லியோன் பேய் வேடத்தில் நடிக்கிறார். இப்படத்தில் சன்னி லியோனுடன் சதீஷ், தர்ஷா குப்தா, ஜிபி முத்து உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பட்டு சேலையில் படு க்யூட்டாக கலந்து கொண்டார் நடிகை சன்னி லியோன்.

இந்நிலையில் நடிகை சன்னி லியோனிடம், தமிழ் சினிமாவில் பிடித்த நடிகர் யார் என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு பதில் அளித்த சன்னி லியோன், நடிகர் ரஜினிகாந்த்தான் பிடிக்கும் என கூறியுள்ளார். ரஜினிகாந்தின் நடிப்பு தனக்கு பிடிக்கும் என கூறியுள்ளார். பாலிவுட் பிரபலங்கள் பலரும் நடிகர் ரஜினிகாந்துக்கு ரசிகர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent News