திருமணம் என்பது நினைத்தவுடன் அனைவராலும் செய்துவிட முடியாது. அதற்கான நேரமும், யோகமும் கூடிவந்தால் மட்டுமே திருமணம் நடைபெறும்.
ஆனால், தற்போதைய இளைஞர்கள் திருமணத்தின் மீது அதிக ஆர்வம் காட்டுவதில்லை. ஏனென்றால், அவர்கள் சிங்கிளாகவும், சுகந்திரமாகவும் வாழ்வதை விரும்புகிறார்கள். அந்த வகையில், திருமணம் என்ற வார்த்தையை கேட்டாலே, தலைதெறிக்க ஓடும் ராசிக்காரர்களை பற்றி இங்கே பார்க்கலாம்.
மேஷம்
செவ்வாய் ஆளும் மேஷ ராசிக்காரர்கள், வலுவான எண்ணம் கொண்டவர்கள். இவர்கள் எந்த வகையிலும் தங்கள் சுதந்திரத்தை தியாகம் செய்ய விரும்புவதில்லை. தனது வாழ்க்கை தனக்கு பிடித்தார் போலத்தான் நடக்க வேண்டும் என்பதில் பிடிவாத குணம் உள்ளவர்கள். இவர்கள் தனக்காக மட்டுமே யோசிக்கக்கூடியவர்கள்.
தனக்கு பிடித்த விஷயங்களை மட்டுமே செய்ய நினைப்பவர்கள். எனவே, இவர்கள் தன்னுடன் இன்னொருவரை இணைக்க விரும்பவில்லை. அப்படியே ஈர்ப்பு வந்தாலும், லிவிங் டூ கேதரை தேர்வு செய்வார்கள். இவர்களுக்கு திருமண வாழ்க்கை செட் ஆகாது என்ற கொள்கையில் இருப்பவர்கள்.
மிதுனம்
மிதுன ராசிக்காரர்கள் இயல்பாகவே தனிப்பட்ட சுகந்திரத்தை விரும்புபவர்கள். எனவே, வாழ்நாள் முழுவதும் ஒருவருடன் பிணைக்கப்பட்டு இருப்பது இவர்களுக்கு பிடிக்காது. பயணம் செய்வதும், புதிய மனிதர்களை சந்திப்பதும் இவர்களுக்கு மிகவும் பிடித்த விஷயம். ஒரு முறை திருமணம் செய்து கொண்டால், முன்பு இருந்த சந்தோசத்தையம், சுகந்திரத்தையும் அனுபவிக்க முடியாது என இவர்கள் நினைப்பதால் திருமணம் செய்வதை விரும்புவதில்லை.
தனக்கு பிடிக்காத விஷயங்களில் ஈடுபடுவதை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். எனவே, இவர்களுக்கு திருமணம் செய்வதில் நாட்டம் குறைவு.
சிம்மம்
சூரியன் ஆளும் சிம்ம ராசிக்காரர்கள், பெயரும் புகழும் உடையவர்கள். தான் எதை செய்தாலும் அதற்கான பலனை எதிர்பார்த்து செய்பவர்கள். தான் செய்யும் வேலையில் அதீத கவனம் செலுத்துவதால், இவர்கள் இல்லறவாழ்க்கையை விரும்புவதில்லை. இவர்கள், தனிமை விரும்பிகள்.
எனவே, வாழ்கை முழுவதும் ஒருவர் தன்னுடன் இருப்பதை இவர்கள் விரும்புவதில்லை. தனியாக இருந்தால் எனது இஷ்டத்திற்கு நடக்கலாம் மற்றும் தனக்கு பிடித்ததை செய்யலாம் என இவர்கள் நினைப்பதால் திருமண வாழ்க்கையை வெறுக்கிறார்கள்.
தனுசு
தனுசு ராசிக்காரர்கள், இயல்பாகவே ஆற்றலும் அறிவும், தைரியம் உள்ளவர்கள். அதிகமாக பயணம் செய்வதை இவர்கள் விரும்புவதால், எந்த கமிட்மெண்டும் வைக்க மாட்டார்கள். நிறைய இடங்களை பார்க்கவும், புதிய புதிய நண்பரகாலை உருவாக்கவும் விரும்புபவர்கள். பிரச்சனை மற்றும் வேறு விருப்பமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபட விரும்ப மாட்டார்கள்.
காதல் வாழ்க்கையே தொல்லை என நினைக்கும் போது, இவர்கள் திருமண வாழ்க்கையை சுத்தமாக வெறுக்கிறார்கள். இவர்களுக்கு நண்பர்களும், குடும்பத்தினரும் மட்டும்தான் முக்கியம் என நினைப்பார்கள்.
மகரம்
மகர ராசிக்காரர்கள் இயல்பாகவே சாகசத்தை விரும்புபவர்கள். இவர்கள் தொழிலில் அதிகமாக கவனம் செலுத்துவதால், இவர்களுக்கு திருமண வாழ்க்கை மீது ஆர்வம் இருப்பதில்லை. நான், எனது வேலை, எனது பணம், எனது சுதந்திரம் என தனக்காக மட்டும் யோசிப்பவர்கள். மற்றவர்களுக்கு உதவுவதை இவர்கள் அதிகம் விரும்புவதில்லை.
தான் நினைத்ததை உடனே செய்து முடிக்க வேண்டும் என நினைப்பவர்கள். எனவே, திருமணத்தை இவர்கள் மிகப்பெரிய சுமையாக கருதுவார்கள். குடும்பத்தை அதிகமாக நேசிப்பவர்கள். ஆனால், தன்னுடன் ஒருவர் இணைந்து இருப்பதை விரும்பாதவர்கள்.
கும்பம்
கும்பம் இயற்கையாகவோ உணர்ச்சிவசப் படக்கூடியவர்கள். தன்னை போல மற்றவர்களும் நிம்மதியாகவும் சுதந்திரமாகவும் இருக்க வேண்டும் என நினைப்பதால் இவர்கள் யாரையும் தன்னுடன் இருக்க கட்டாயப்படுத்த விரும்புவதில்லை. ஒருவரை நமைத்து கட்டுப்பாட்டில் வைப்பது கொடூரமான வலி என்பதால் அவர்கள் அதை விரும்புவதில்லை.
இவர்கள், ஒரே இடத்தில் இருப்பதை விரும்புவதில்லை. ஐவர்களுக்கு நிறைய நண்பர்கள் இருப்பார்கள். தனக்கு இருப்பது ஒரு வாழ்க்கை எனவும். அதை தனக்கு பிடித்தார் போல வாழ வேண்டும் எனவும் நினைப்பவர்கள். எனவே, இவர்கள் திருமணத்தில் கவனம் செலுத்துவதில்லை.
மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, துலாம், விருச்சிகம் மற்றும் மீனம் ஆகியவை திருமணம் செய்து கொள்ள ஆர்வம் உள்ள ராசிக்காரர்கள்.