Tuesday, December 24, 2024
HomeLatest Newsமிகவும் தைரியசாலி பெண் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மிகவும் தைரியசாலி பெண் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

பெண்கள் என்றாலே மென்மையானவர்கள், பயந்த சுபாவம் என நாம் நினைப்பது உண்டு. ஆனால், தைரியம், மன வலிமை, நிதானம் மற்றும் பொறுமை ஆகியவற்றில் ஆண்களை விட பெண்களே சிறந்தவர்கள் என கூறப்படுகிறது. அந்தவகையில், மிகவும் தைரியமான பெண் ராசிக்காரர்கள் யார் என இங்கே பார்ப்போம்.

சிம்மம்

சிம்ம ராசிப்பெண்கள் இயல்பாக வலிமையான மற்றும் தன்னை மட்டுமே மதிக்கும் நம்பிக்கையான பெண்கள். இருப்பினும் சற்று உணர்ச்சிவசப்படுபவர்கள். ராசியின் சின்னமே இவர்களுடைய தைரியம் எப்படிப்பட்டது என்பதை உணர்த்துகிறது. இவர்கள் மனதளவில் வலுவாக இருக்க, இவர்களுக்கு தனது அன்புக்குரியவர்களிடமிருந்து நிலையான ஆதரவு தேவை.

இவர்கள், எப்போதும் உயர்வானவர்களை மட்டுமே மதிக்கும் மற்றும் ரசிக்கும் குணம் உள்ளவர்கள். தனித்தியங்கும் ஆற்றல் படைத்தவர். யாருடைய தயவும் இவளுக்குத் தேவையே இல்லை. ஒவ்வொரு சந்தர்ப்பத்தையும் தங்களை நிரூபிப்பதற்கான வாய்ப்பாக அவர்கள் பார்ப்பார்கள். எனவே, எப்போதும் கவனமாக இருப்பார்கள்.

விருச்சிகம்

செய்வாய் ஆளும் விருச்சிக ராசிக்காரர்கள், இயல்பாகவே துணிச்சல் மற்றும் புத்திசாலியான பெண்களாக இருப்பார்கள். தங்களின் வெற்றிக்காக கடுமையாக போராடுபவர்கள். வாழ்க்கையில் எவ்வளவு பெரிய சவால்கள் வந்தாலும் அதை எதிர்த்து போராடும் வலிமை உள்ளவர்கள்.

தனது குறிக்கோள் நிறைவேறும் வரை ஓயாது போராடும் மன வலிமை உள்ளவர்கள். தான் எப்படி இருக்க வேண்டும், என்ன செய்ய வேண்டும் என அனைத்தையும் திட்டமிட்டு செய்பவர்கள். கட்டுப்பாடுகளை விரும்ப மாட்டார்கள், தனக்கு பிடித்தவற்றை செய்பவர்கள்.

தனுசு

தனுசு ராசிக்காரர்கள் மிகவும் எளிமையானவர்கள். ஒரு விஷயத்தை பற்றி அதிகமாக சிந்திப்பதோ, அதைப்பற்றி கவலைப்படுவது அவர்களுக்கு பிடிக்காது. அற்ப விஷயங்களுக்கு வருத்தப்படுவது இவர்களுக்கு பிடிக்காத விஷயங்களில் ஒன்று. தனுசு ராசி பெண்ணின் நம்பிக்கையே அவரது சூப்பர் ஆயுதம். இவர்களின் கண்மூடித்தனமான தைரியம், இவர்களை பைத்தியக்காரர்கள் என பலரை நினைக்க வைக்கும். இவர்கள் எதற்கும் அஞ்சாமல் நம்பிக்கையுடன் செயல்படுவார்கள்.

புதிதாக ஒன்றை முயற்சிக்கும் போது எப்பொழுதும் சிறப்பான முடிவுகளை மட்டுமே எதிர்பார்ப்பார்கள். இவர்களின் இந்த குருட்டுத்தனமான தைரியம் இவர்களுக்கான வெற்றியை பெற்றுத்தரும். ஒருவேளை இவர்களின் முயற்சி தோல்வியடைந்தால் சோர்ந்து போகாமல், மீண்டும் நம்பிக்கையும் முயற்சிப்பார்கள்.

மகரம்

மகர ராசி பெண்கள், பிடிவாதமாகவும் தன்னலமின்றி தனது இலட்சியத்தை அடைபவர்கள். இது, திட்டம், வேலை, சுய-உணர்தல் மட்டுமல்ல, குடும்பம் என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இவர்கள் மிகவும் கடின உழைப்பாளிகள், நேர்மையானவர்கள் மற்றும் அன்பானவர்கள். அவளை புண்படுத்துவது எளிதல்ல, ஏனென்றால் அவள் தன் மீது மிகுந்த நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு தந்தையுடன் வலுவான உறவு இருப்பதால், இவர்கள் தெளிவாக சிந்தனை உடையவர்கள். தேவையற்ற விஷயங்கள் மீது கவனம் செலுத்துவதில்லை.

கும்பம்

கும்ப ராசிப்பெண்கள், அதிகமாக கனவு காண்பவர்கள். மற்றவர்களின் செயலை அலட்சியப்படுத்துபவர்கள். தங்களின் செயல்களில் இலட்சியமாக இருப்பவர்கள். வலிமையான இதயம் உள்ளவர்கள். ஒவ்வொரு விஷயத்தையும் பற்றுடன் செய்பவர்கள். இவர்களை பலவீனமான பெண் பால் என்று கருதுவது அவளுக்கு சுத்தமாக பிடிக்காது. தன்னை வலிமை மற்றும் செயல் திறம் மிக்க அறிவானவள் என்று போற்ற வேண்டும் என விரும்புபவர்கள்.

கும்ப ராசிப் பெண்கள் மிகவும் அன்பானவர்கள். எதையும் சிந்தித்து பொறுமையுடன் செயல்படுபவர்கள். ஒரு கோடு போட்டால் ரோடு போடும் திறமை உள்ளவர்கள்.

மீனம்

மீன ராசி பெண்கள் மிகவும் நம்பிக்கையானவர்கள். அனைவரையும் விட விசித்திரமான தோற்றம் உடையவர்கள். எவ்வளவு கடினமான சூழ்நிலையாக இருந்தாலும் அதை எளிமையாக சமாளிக்கும் தன்மை உடையவர்கள். இவர்கள் தனது குடும்பத்தினர் மற்றும் மற்றவர்களின் சந்தோசம் மற்றும் சுக துக்கங்களையும் தன்னுடைய சுக துக்கங்களாக நினைப்பவர்கள்.

எந்த ஒரு விஷயத்தையும் தன்னுள் மறைத்து வைத்துக்கொள்ள மாட்டார்கள். அதே போல மற்றவர்களின் ரகசியங்களை யாரிடமும் பகிர்ந்துகொள்ள மாட்டார்கள். எல்லா விஷயத்தையும் பொறுமையாக யோசித்து பெயல்படுபவர்கள். மனதளவில், அதீத தைரியமும் வலிமையையும் உள்ளவர்கள்.

Recent News