Wednesday, December 25, 2024
HomeLatest Newsஉடலுறவுக்கு அடிமையாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

உடலுறவுக்கு அடிமையாக இருக்கும் ராசிக்காரர்கள் யார் தெரியுமா?

மனிதனாய் பிறந்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்திற்கு அடிமையாக இருப்போம். அது அவர்களின் அன்றாட பழக்கங்களுடன் தொடர்புடையதாக இருக்கும். அந்த வகையில், உடலுறவுக்கு அடிமையாக காணப்படும் ராசிக்காரர்கள் யார் என இந்த கட்டுரையில் காணலாம்.

ஒரு சிறிய விஷயம் ஒரு நிமிடத்தில் நமது வாழ்க்கையை மாற்றிவிடும். அது நல்லதாகவும் இருக்கலாம், கேட்டதாகவும் இருக்கலாம். நாம் அனைவரும் ஒரு சில விஷயங்களுக்கு அடிமையாக இருப்போம். அது பாடாக இருக்கலாம், மது, புகையிலை, நடனம், சாப்பாடு, தூக்கம் இப்படி எந்த விஷயமாகவும் இருக்கலாம். ஜோதிடத்தின் படி, ஒவ்வொரு ராசிக்கு ஏற்றார் போல ஒருவரின் குணநலம் மாறுபடும். அந்தவகையில், பாலுறவுக்கு அடிமையான ராசிகளாக சில ராசியை ஜோதிடம் குறிப்பிட்டுள்ளது.

பாலியல் அடிமைத்தனம் ஒரு ஆபத்தான விஷயங்களில் ஒன்று. பாலியல் உறவுக்கு அடிமையாதல் உண்மையான ஒன்று. நம்மில் பலர் எவ்வளவு கோவமாக இருந்தாலும் பாலியலில் ஈடுபட்டால், மனப்பாரம் நீங்கிவிடும் என நினைக்கிறோம். அறிவியல் ரீதியாக அது உண்மைதான். அப்படி, பாலுறவுக்கு அடிமையாக இருக்கும் ராசிக்காரர்களின் பட்டியலை இங்கே காணலாம்.

​மேஷம்

மேஷம் செவ்வாய் ஆளும் ஒரு நெருப்பு ராசி. இது இயல்பாகவே, தைரியம், வீரம், வேகம் ஆகியவற்றில் சிறந்தது. உடலுறவில் அதீத நாட்டம் உள்ளவர்கள். அதுமட்டும் அல்ல பாலுறவின் போது சற்று கரடு முரடாக நடந்து கொள்பவர்கள். உடலுறவு அவர்களின் இதயத்தை முழுமையடைய செய்கிறது. அவர்களை இன்னும் ஆற்றல் மிக்கதாக இது ஆக்குகிறது.

அவர்கள் உடலுறவுக்காக புதிய புதிய மனிதர்களை சந்திப்பதற்காக வாழ்க்கையை வாழ்கிறார்கள். சிற்றின்பத்தில் அதீத ஆர்வம் உள்ளவர்கள். வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் காலத்தில் இறங்கி விளையாடுவதால், இவர்கள் எளிதில் பாலியல் அடிமைகளாக மாற வாய்ப்பு அதிகம்.

ரிஷபம்

ரிஷப ராசிக்காரர்கள் இயல்பாகவே பாலுறவில் அதீத நாட்டம் உள்ளவர்கள். ஆனால், வெளியில் பார்க்கும் போது இவர்கள் எளிமையானவர்களாகவும், அன்பானவர்களாவும் இருப்பார்கள். அவர்கள் படுக்கையில் சிற்றின்ப மற்றும் மெதுவான உடலுறவை விரும்புகிறார்கள். மேலும், அவர்கள் அதற்கு அடிமையாக வாய்ப்புள்ளது. ஒரு விஷயத்தை அவர்கள் அடிக்கடி செய்வதால், அதை அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

சிம்மம்

சிம்மம் சூரியன் ஆளும் நெருப்பு ராசி. இவர்கள் அறிவு, புகழ் மற்றும் வெற்றிக்கு சொந்தக்காரர்கள். இவர்கள் மீது அனைவரின் கண்களும் இருப்பதால், இவர்களுடன் மற்றவர்கள் நெருக்கமாக பழகுவார்கள். மற்றவர்களின் கவனத்தை எளிமையாக ஈர்க்கும் திறன் உள்ளவர்கள்.

தங்கள் துணையுடன் பாலுறவில் ஈடுபட மிகவும் விரும்புவார்கள். சிம்ம ராசிக்காரர்கள் அனைத்திலும் மேல்நிலையில் இருக்க விரும்புகிறார்கள் மற்றும் செக்ஸ் அவர்களின் மனதில் பெரும்பாலும் இருக்கும். செக்ஸ் இல்லாமல் வாழ்வதை அவர்களால் நினைத்துக்கூட பார்க்க முடியாது.

​விருச்சிகம்

செவ்வாய் ஆளும் விருச்சிகம் ஒரு நீர் ராசி. அவர்கள் மர்மமான, வினோதமான மற்றும் புதிரானவர்களாக காணப்படும் உணர்ச்சிமிக்க நபர்கள். அவர்களின் ஆளுமை பலரை ஈர்க்கிறது. எனவே, அவர்கள் இன்னும் கவர்ச்சியாக இருக்க செக்ஸ் வாழ்க்கையில் ஈடுபட விரும்புகிறார்கள். படுக்கையில் தனக்கு தெரிந்து எல்லா வித்தைகளையும் காட்டுவதில் சிறந்தவர்கள். இந்த சுழற்சி அவர்களை எப்போதும் செக்ஸ் பற்றி சிந்திக்க வைக்கிறது.

​மீனம்

மீனம் இயல்பாகவே ஒரு சிற்றின்பம் உடைய ராசி. இவர்களின் எண்ணம் எப்போதும் உடலுறவு பற்றியே இருக்கும். தான் செய்யும் ஒவ்வொரு விஷயத்திலும் ரொமாண்டிக்காக இருப்பார்கள். இவர்கள் தன்னுடன் இருக்கும் நபரின் கவனத்தை ஈர்க்க முடியும். செக்ஸ் ஒன்றே மீன ராசிக்காரர்களுக்கு உலகத்தின் மேல் உள்ள உணர்வை ஏற்படுத்தக்கூடியது. எனவே அவர்கள் அதில் சற்று அதிகமாக ஈடுபட வாய்ப்புள்ளது.

Recent News