Tuesday, December 24, 2024
HomeLatest NewsWorld Newsவாழ்நாள் முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உயிரினம் எது தெரியுமா?

வாழ்நாள் முழுவதும் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காத உயிரினம் எது தெரியுமா?

பாலைவனங்களில் வாழ்கின்ற கங்காரு எலிகள் தன் வாழ்நாள் முழுதும் தண்ணீர் குடிக்காத விலங்கு இனமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.விஞ்ஞானிகளின் கூற்றுப்படி இந்த வகையான எலிகள், தன் வாழ்நாள் முழுவதும் தண்ணீர் குடிப்பதில்லை.அவற்றின் செரிமான அமைப்பு சரியாக செயல்பட தண்ணீர் தேவையில்லை என்று ஆய்வுகள் கூறுகின்றன.இந்த வகை எலிகள் மிக வேகமாக ஓடும் திறன் கொண்டவை என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் ஒரு கங்காரு எலி ஒரு நொடியில் சுமார் 6 மீட்டர் தூரம் வரை ஓடக்கூடியதாம்.இந்த வகை எலிகள் நீண்ட கால்களை கொண்டிருப்பதால் இவை கங்காரு எலி என அழைக்கபடுகிறது.இதன் மொத்த நீளம் 38 செ.மீ ஆகும். அதில் வால் மட்டும் 20 சென்றிமீற்றர் உள்ளமை வியப்பிற்குரியது.மேலும் கங்காரு எலிகள் ஏனைய விலங்குகளை போல பழங்கள், இலைகள் மற்றும் தண்டுகளை விரும்பி சாப்பிடுவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Recent News