Tuesday, December 24, 2024
HomeLatest NewsSingle's அதிகம் உள்ள நாடு எது தெரியுமா?

Single’s அதிகம் உள்ள நாடு எது தெரியுமா?

கடந்த 2000 ஆம் ஆண்டில் 15.5 % மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் 2050-ல் 40 சதவீதமாக உயரும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

தென்கொரியாவில் திருமணம் செய்யாமல் தனியாக வாழ்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக ஒரு  தகவல் வெளியாகியுள்ளது.

தென்கொரிய நாட்டின் புள்ளியியல் ஏஜென்சி இது குறித்து கணக்கெடுத்துள்ளது. அதன்படி கடந்த 2021 ஆம் ஆண்டு நிலவரப்படி 5இல் 2 பேர் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2000 ஆம் ஆண்டில் 15.5 % மக்கள் திருமணம் செய்து கொள்ளாமல் தனியாக இருந்துள்ளனர். தற்போது இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் நிலையில் 2050-ல் 40 சதவீதமாக உயரும் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

நாட்டில் வேலை பாதுகாப்பு இல்லாமை , நிதி சுதந்திரம் இது போன்ற காரணங்களால் குழந்தையும் வேண்டாம் திருமணமும் வேண்டாம் என தென்கொரிய இளைய சமுதாயம் செல்வதாக கூறப்படுகின்றது.

மேலும் தரவுகளின்படி தென்கொரியாவில் 12 சதவீத மக்கள் குழந்தை வளர்ப்பை பெரிய சுமையாக கருதுகின்றனர்.

25 சதவீத மக்கள் தங்களுக்கு சரியான ஜோடி கிடைக்கவில்லை ஆகவே திருமணம் செய்து கொள்ளவில்லை என கூறுவதாக அந்த தரவுகள் கூறுகின்றன.

இப்போதைக்கு எங்களுக்கு கல்யாணமே வேண்டாம் என தென்கொரியாவில் பலர் கூறினாலும், அது நாட்டின் பிறப்பு விகிதத்தை குறைக்கும். மக்கள் தொகையினை குறைக்க கடுமையான திட்டங்களை கொண்டுவந்துள்ள சீனா தற்போது அதனை தளர்த்தியுள்ளது.

ஆகவே தென் கொரியாவில் தற்போது நிலவும் இந்த நிலை மாறவேண்டும் என்பதுதான் சர்வதேச வல்லுநர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

Recent News