Tuesday, December 24, 2024
HomeLatest Newsநீங்கள் காணும் கனவை மத்தவங்ககிட்ட சொன்ன என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் காணும் கனவை மத்தவங்ககிட்ட சொன்ன என்ன நடக்கும் தெரியுமா?

நீங்கள் காணும் கனவை மத்தவங்ககிட்ட சொன்ன என்ன நடக்கும் தெரியுமா?

நாம் உறங்கும் போது பல வகையான கனவுகள் வரும். அது நல்லதாக இருக்கலாம் அல்லது கேட்டதாகவும் இருக்கலாம். இவை ஒவ்வொன்றும் நமக்கு சில விஷயங்களை கூறுகிறது என்பது உங்களுக்கு தெரியுமா?.

நாம் காணும் சில கனவுகளை யாரிடமும் பகிந்து கொள்ள கூடாது என வீட்டில் உள்ள பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்போம். அதற்கு பின்னால் உள்ள காரணம் என்ன என்று தெரியுமா?. அந்த கனவுகளை நாம் மற்றவர்களிடம் கூறினால் அதனால் கிடைக்கும் நன்மை குறைந்து, பண இழப்பை ஏற்படுத்தும் என கூறப்படுகிறது. அந்த 5 கனவுகளை பற்றி இங்கே பார்க்கலாம்.

கனவு ஒவ்வொருவருக்கும் வரும், கனவுகள் இல்லாதவர்கள் எவரும் இல்லை. கனவுகள் குறித்து ஸ்வப்னா சாஸ்திரத்தில் பல தகவல்கள் கொடுக்கப்பட்டுள்ளன. கனவு அறிவியலின் படி, ஒவ்வொரு கனவுக்கும் பல அர்த்தம் உள்ளது. நாம் அடிக்கடி காணும் கனவை, நமது அன்புக்குரியவர்கள் அல்லது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்வோம். ஆனால், ஸ்வப்னா சாஸ்திரத்தின் படி, நாம் காணும் கனவை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ளக்கூடாது என கூறப்படுகிறது.

சில கனவுகளைப் பற்றி இன்று நாங்கள் உங்களுக்குச் சொல்லப் போகிறோம். அவை உங்களுக்கு வந்தால், அதை நீங்கள் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ளக்கூடாது. இல்லையெனில், நீங்கள் பெரிய நிதி இழப்பை சந்திக்க நேரிடும்.

ஒரு அழகான மலர் தோட்டம்

உங்கள் கனவில் ஒரு அழகான பழத்தோட்டம் அல்லது மலர் மலர் தோட்டத்தை கண்டால், அதை யாரிடமும் பகிர வேண்டாம். ஸ்வப்னா சாஸ்திரத்தின் படி, அத்தகைய கனவு நல்லது என்று கருதப்படுகிறது. அத்தகைய கனவுகள் உங்களுக்கு வந்தால், நீங்கள் கூடிய சீக்கிரம் சில நல்ல செய்திகளை பெறபோகிறீர்கள் என்று அர்த்தம்.

வெள்ளி கலசம் அல்லது ஜாடி

உங்கள் கனவில் நீங்கள் வெள்ளியால் ஆனா ஒரு கலசத்தை கண்டால், அது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஸ்வப்னா சாஸ்திரத்தின் படி, அத்தகைய கனவு வாழ்க்கையில் வர இருக்கும் நல்ல நாட்களைக் குறிக்கிறது. இந்த வகையான கனவுகள் எதிர்காலத்தில் உங்களுக்கு நல்ல பணபலத்தையும் மகிழ்ச்சியையும் கொடுக்க உள்ளதாக கூறப்படுகிறது. உங்களுக்கு இதுபோன்ற கனவுகள் வந்தால் இதைப் பற்றி மற்றவர்களிடம் சொல்லாதீர்கள். கூறினால், இதன் நற்பலன்கள் குறையும்.

உங்கள் பெற்றோர் கனவில் தண்ணீர் குடிப்பது

நீங்கள், உங்கள் பெற்றோர் தண்ணீர் கொடுப்பது போல எப்போதாவது கனவு கண்டால், அத்தகைய கனவு மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. இந்த மாதிரியான கனவுகள் எதிர்காலத்தில் நீங்கள் நினைக்க முடியாத அளவுக்கு முன்னேறப் போகிறீர்கள் என்பதற்கான அறிகுறியாகும். எனவே, அத்தகைய கனவுகளை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அப்படி கூறினால், பலிக்காமல் போகலாம்.

கனவில் கடவுளை பார்ப்பது

உங்கள் கனவில் கடவுளை நீங்கள் கண்டால், விரைவில் உங்களுக்கு நல்ல செய்தி கிடைக்கும் என்பதற்கான அறிகுறியாகும். அத்தகைய கனவை நீங்கள் ஒருவருடன் பகிர்ந்து கொண்டால், ஸ்வப்னா சாஸ்திரத்தின் படி, உங்கள் வேலை கெட்டுவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் தான் தவறுதலாக கூட யாரிடமும் இதுபோன்ற கனவுகளை பகிர்ந்து கொள்ளாமால் இருப்பது நல்லது.

இறப்பது போல கனவு

உங்கள் கனவில் நீங்கள் இறந்துவிட்டதாகவோ அல்லது உங்களுக்கு வேண்டியவர்கள் யாராவது இறந்துவிட்டதாகவோ கனவு கண்டால், இதுபோன்ற கனவை யாருடனும் பகிர்ந்து கொள்ளாதீர்கள். அத்தகைய கனவு சுப நிகழ்வுக்கான அறிகுறியாக இருக்கும். அத்தகைய கனவுகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வது வர இருக்கும் மகிழ்ச்சியை கெடுப்பதாக கூறப்படுகிறது. இது போன்ற கனவுகள் வீட்டில் நடக்க உள்ள சுபகாரியத்தின் அறிகுறியாக கருதப்படுகிறது.

Recent News