Thursday, January 23, 2025
HomeLatest Newsஒட்டுமொத்த உலகமும் நேற்றிரவு கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த உலகமும் நேற்றிரவு கூகுளில் தேடியது என்ன தெரியுமா?

ஒட்டுமொத்த உலகமும் நேற்று உலக கோப்பை கால்பந்து போட்டியை தான் கூகுளில் தேடியதாக கூகிளின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

நேற்று நடைபெற்ற உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தை உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்கள் நேரலையில் பார்த்தனர். அதுமட்டுமல்லாது ஆயிரக்கணக்கானோர் நேரில் சென்றும் பார்த்தனர்.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் உலகக் கோப்பை கால்பந்து போட்டியை தான் ஒட்டுமொத்த உலகமே கூகுளில் தேடி உள்ளதாக கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார்.

அதேசமயம் உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி போட்டி குறித்த தேடல் தான் கடந்த 25 ஆண்டுகளில் அதிகமான டிராபிக்கை பதிவு செய்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்நிலையில் சுந்தர் பிச்சையின் இந்த தகவல் பெரும் ஆச்சரியத்தை மக்களுக்கு அளித்துள்ளது.

Recent News