Thursday, January 23, 2025
HomeLatest Newsபுத்தாண்டு தினத்தில் நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா? - குவியும் வாழ்த்துக்கள்

புத்தாண்டு தினத்தில் நயன்தாரா என்ன செய்தார் தெரியுமா? – குவியும் வாழ்த்துக்கள்

புத்தாண்டு தினத்தில் நயன்தாரா செய்த நல்ல செயல் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டார் ஆக வலம் வருபவர் தான் நயன்தாரா, நடிகர்களுக்கு இணையாக சம்பளம் பெரும் நடிகையாகவும் இருக்கிறார்.

தமிழ் சினிமாவில் ஐயா படத்தின் மூலம் அறிமுகமான நயன்தாரா நாளடைவில் உச்ச நடிகையாக மாறிவிட்டார். 2015ஆம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நானும் ரௌடிதான் படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் இருவருக்கும் காதல் மலர்ந்து பிறகு கடந்த ஆண்டு ஜூன் 9ஆம் திகதி இரு வீட்டார் சம்மதத்துடன் திருமணம் செய்துக் கொண்டனர்.

இவர்களின் திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார்கள்.

இந்நிலையில், விக்கி- நயன் இருவரும் தனது இரட்டைக் குழந்தையுடன் கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டைக் கொண்டாடி சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களையும் பதிவிட்டிருந்தனர்.

இந்நிலையில், நயன் மற்றும் விக்கி தம்பதியினர் புத்தாண்டு தினத்தில் சென்னை எழும்பூர் ரயில் நிலையத்திற்கு அருகில் வசிக்கும் சாலையோர மக்களுக்கு புத்தாண்டு வாழ்த்து தெரிவித்து பரிசுகளையும் வழங்கி வைத்துள்ளார்.

புதிய ஆண்டில் நயன் விக்கி செய்த இந்த செயலுக்கு அனைவரும் பாராட்டி வீடியோக்களையும் பகிர்ந்து வருகின்றனர். குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Recent News