எதிர்காலத்தைப் பற்றி அறிய நாம் எல்லோருக்கும் அதீத ஆர்வம் கொண்டிருப்பது இயற்கையான நிகழ்வு தான். அந்த காரணத்தினால் தான் ஜோதிடம் இன்று மக்களிடையே மிகப் பிரபலம் அடைந்து உள்ளது. ஜோதிட கலையில் ஜாதகத்தை கணித்து பலன் கூறுதல், கைரேகை சாஸ்திரம், எண் கணித சாஸ்திரம் உள்ளிட்டவைகள் அனைத்தும் எதிர்காலத்தில் நமக்கு என்ன நடக்கும் என்பதை முன்கூட்டியே ஓரளவு தெரிந்து கொள்ள உதவும் வழிமுறைகள் ஆகும்.
சில நேரங்களில் நமது உடலின் சில பாகங்களில் அசாதாரணமான நிலையில் துடிப்புகள் ஏற்படும். இத்தகைய துடிப்புகள், நமக்கு நிகழ இருக்கும் நன்மை மற்றும் தீமைகளை உணர்த்தும் அறிகுறிகளாக பெரும்பான்மையான மக்களால் கருதப்படுகிறது. இதில் கண் துடித்தல் பற்றி பார்ப்போம்.
கண்கள் துடித்தல்
கண் துடித்தல் நிகழ்வு என்பது, கண்கள் மற்றும் அதனை சுற்றி இருக்கும் நரம்புகள், நாளங்களில் சில சமயங்களில் அதிக வேகம் மற்றும் அதிக வேகத்துடன் ரத்தம் பாயும் போது கண்களை சார்ந்த பகுதிகளில், வேகமான துடிப்பு ஏற்படுவதை நாம் உணர முடியும். இது உடல் சார்ந்த விசயமாக இருக்கும்போதிலும், நமக்கு ஏற்பட உள்ள நன்மை, தீமைகளை முன்னறிவிக்கும் அறிகுறியாகவே, பழங்காலம் தொட்டே கருதப்பட்டு வருகிறது.
கம்பராமாயணம், சிலப்பதிகாரம் உள்ளிட்டவைகளிலும் கண் துடிப்பதால் ஏற்படும் பலன்கள் குறிப்பிடப்பட்டு உள்ளன.
“துடிசாஸ்திரநூல்” சொல்வது என்ன?
ஆண்களுக்கு வலது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டாலும், பெண்களுக்கு இடது கண்பகுதியில் துடிப்பு ஏற்பட்டதால் அவை நற்பலன்கள் ஏற்படபோவதற்கான அறிகுறியாக கருதப்படுகிறது. அதுவே ஆண்களுக்கு இடது கண்பகுதியிலும், பெண்களுக்கு வலது கண் பகுதியிலும் துடிப்பு ஏற்பட்டால் கெடுதலான பலன்கள் ஏற்படுவதற்கான அறிகுறி என ஜோதிட சாத்திரத்தில் ஒரு பிரிவான, உடல்பகுதிகளில் ஏற்படும் துடிப்பை வைத்து பலன்கள் கூறும் “துடிசாஸ்திரநூலில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
ஆண்களுக்கு வலது கண் புருவம் துடித்தால் புகழ், பெருமை ஏற்படும். வலது கண் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் விரைவில் தீரும். வலது கண்ணின் கீழ் சதைப்பகுதி துடித்தால் செல்வமும், புகழும் உண்டாகும்.
இடது புருவம் துடித்தால் வம்பு, வழக்குகள் ஏற்படலாம். பெண்களுக்கு இடது கண்பகுதி முழுதும் துடித்தால் செல்வம், புகழ் உண்டாகும். இடது கண்ணின் மேல் இமை துடித்தால் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகள் அனைத்தும் விரைவில் தீரும்.
வலது கண்ணின் கீழ் இமை துடித்தால் கணவருக்கு உடல்பாதிப்பு ஏற்படுவதற்கான அறிகுறி ஆகும். ஆண் மற்றும் பெண் ஆகிய இருபாலருக்கும் ஒரே நேரத்தில், அவர்களின் இரண்டு கண்களின் புருவங்கள் சேர்ந்து துடித்தால் அவர்களுக்கு நற்பலன்கள் ஏற்படும்.