Friday, January 24, 2025
HomeLatest Newsகிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

கிறிஸ்துமஸ் தாத்தா தோன்றிய சுவாரஸ்ய வரலாறு தெரியுமா?

சாண்டாவுக்கு குழந்தைகள் கடிதங்களை எழுதுகிறார்கள், அவர்களின் விருப்பங்களை சாண்டா கிளாஸ் நிறைவேற்றுகிறார் மற்றும் அவர்கள் விரும்பும் பரிசுகளை வழங்குகிறார்.

சாண்டா கிளாஸ் இல்லாமல் கிறிஸ்துமஸ் முழுமையடையாது. கிறிஸ்துமஸ் என்றாலே தேவாலய பிரார்த்தனை, கிறிஸ்துமஸ் ட்ரீ, சாண்டா கிளாஸின் கிஃப்ட் என பல விஷயங்கள் நினைவிற்கு வரும்.

இந்த பரிசு கொடுப்பதன் மகிழ்ச்சி, நல்லெண்ணத்தின் அடையாளம் என அதனை வழக்கமாக்கி அப்படியே பின்பற்றி வருகின்றார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் கிறிஸ்துமஸ் அன்று சாண்டா கிளாஸ் குழந்தைகளுக்கு பரிசுகளை வழங்குவார்.

சாண்டாவுக்கு குழந்தைகள் கடிதங்களை எழுதுகிறார்கள், அவர்களின் விருப்பங்களை சாண்டா கிளாஸ் நிறைவேற்றுகிறார் மற்றும் அவர்கள் விரும்பும் பரிசுகளை வழங்குகிறார்.

யார் இந்த சாண்டா கிளாஸ் ? அவர் எந்த இடத்தை சேர்ந்தவர்? சாண்டா கிளாஸைச் சுற்றியுள்ள சில கட்டுக்கதைகளைப் பார்ப்போம்.

நிக்கோலஸ் கி.பி 230 இல் மூன்றாம் நூற்றாண்டின் பிற்பகுதியில் கிரேக்கத்தில் பிறந்தார். பிற்கால வாழ்க்கையில், அவர் ஒரு சிறிய ரோமானிய நகரத்தின் பிஷப் ஆனார்.

303 ஆம் ஆண்டில் உலகெங்கிலும் உள்ள பாதிரியார்கள் கிறிஸ்தவத்தை கைவிட வேண்டிய கட்டாயத்தில் இருந்தபோது தேவாலயக் கோட்பாட்டை அவர் பாதுகாத்ததாக கூறப்படுகிறது.

நிக்கோலஸ் அனாதைகள், மாலுமிகள், கைதிகள் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பாதுகாவலராகவும் அறியப்படுகிறார்.

ஆனால் அவரை நவீன கால சாண்டா கிளாஸ் ஆக்கியது எது?
நான்காம் நூற்றாண்டின் நடுப்பகுதியில், அவர் குழந்தைகளுக்கான மாயாஜால பரிசுகளை அளிப்பதற்காக பிரபலமாக அறியப்படுகிறார்.

இந்த புராணக்கதை அவரது இரண்டு வாழ்க்கைக் கதைகளால் சூழப்பட்டுள்ளது.

முதல் கதை

மூன்று ஏழை சிறுமிகள் வறுமை காரணமாக பாலியல் தொழிலில் ஈடுபட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.

மூன்று தங்கக் கட்டிகளை ரகசியமாக அந்த வீட்டிற்குள் நிக்கோலஸ் வைத்து அவர்களின் வறுமையை முடிவுக்குக் கொண்டு வந்ததாக ஒரு கதை உள்ளது.

இரண்டாவது கதை

ஒரு விடுதியின் காவலரால் கொல்லப்பட்ட மூன்று சிறுவர்களைப் பற்றியது.

பிஷப் அவர்களின் உயிர்களை காப்பாற்றியதாகவும் நம்பப்படுகிறது. இவ்வாறு இரவு நேரங்களில் ஏதோ ஒரு வகையில் பரிசுகளை வழங்கி வந்ததாகவும் கூறப்படுகிறது.

பின்னர் ஐரோப்பிய தெய்வங்களின் சில அம்சங்களை அவர் எடுத்துக் கொண்டார். சிவப்பு கோட் அணிந்த ஒரு வயதான வெள்ளை தாடி மனிதராக தோன்றினார்.

குழந்தைகள் நல்ல நடத்தையை கடைப்பிடிப்பதையும் அவர் உறுதி செய்தார். இப்படித்தான் பிஷப் நிக்கோலஸ் சாண்டா கிளாஸ் ஆனார்.

மக்களிடம் அவர் காட்டிய கருணை, அன்பின் காரணமாகவும் அவரது கல்லறைக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் தொடங்கினர்.

ஆறாம் நூற்றாண்டுக்குள் மக்களிடம் அவரது கல்லறை மிகவும் பிரபலமாகிவிட்டது.

மைரா பகுதிக்கு வந்த இத்தாலிய மாலுமிகள், நிகோலாஸின் கல்லறையிலிருந்து அவரது நினைவுப் பொருட்களை இத்தாலியின் பாரி நகருக்கு எடுத்து சென்றுவிட்டனர்.அதனால், ஜரோப்பா முழுவதிலும் அவரது புகழ் பரவியது.

சாண்டாவைப் பற்றிய சில உண்மைகள்

சாண்டா கிளாஸ் ஒரு கற்பனை பாத்திரம், இது நிறைய நபர்களை அடிப்படையாகக் கொண்டது.

சாண்டா குக்கீகளை மட்டும் சாப்பிடுவார் என நம்பப்படுவதால், கிறிஸ்துமஸ் அன்று குக்கீகளை வைக்கப்படுகின்றனர் மக்கள்.

அவர் குக்கீகளை நேசிக்கிறார் என்றாலும், அது அவருக்குப் பிடிக்கும் ஒரே விஷயம் அல்ல.

Recent News