இலங்கையின் அரச கடன் தொகையானது நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 104.6 வீதமாக அதிகரித்துள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது.
2018 மற்றும் 2022 ஆம் ஆண்டு இடையிலான நான்கு ஆண்டுகள் சம்பந்தமாக தேசிய கணக்காய்வு அலுவலகம் நடத்திய இலங்கை நிதி முகாமைத்துவம் மற்றும் அரச கடன் தொடர்பான விசேட கணக்காய்வு விசாரணைகளில் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
கடந்த 2019 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 86.8 வீதமாக காணப்பட்ட அரச கடன் அடுத்த இரண்டு ஆண்டுகளில் 17.8 வீதம் என்ற அடிப்படையில் வேகமாக அதிகரித்துள்ளதாக கணக்காய்வு விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கடந்த நான்கு ஆண்டுகளில் இலங்கை அரசு வெளிநாடுகள் மற்றும் உள்நாட்டு நிதி நிறுவனங்களில் அதிகளவான கடனை பெற்றுக்கொண்டுள்ளது. இதன் காரணமாக கடன் வீதம் இவ்வாறு அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.