Monday, December 23, 2024
HomeLatest Newsஅதிக தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் தெரியுமா? அச்சமூட்டும் ஆபத்து!

அதிக தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் தெரியுமா? அச்சமூட்டும் ஆபத்து!

அளவுக்கு மிஞ்சினால் எதுவுமே ஆபத்து தான். அதிலும் அதிக தேநீர் அருந்துவது ஆரோக்கியத்தை எப்படி பாதிக்கும் தெரியுமா? 

தேநீர் அடிக்கடி குடிப்பது ஆரோக்கியத்தை உடனடியாக பாதிக்கும். அது எவ்வாறு ஆரோக்கியத்தை பின்னடையச் செய்யும்?

தேநீர் அருந்துவது நிச்சயமாக உங்களுக்கு உடனடி ஆற்றலைத் தரும், ஆனால் நீண்ட காலத்திற்கு அல்ல தேநீரில் நிகோடின் மற்றும் காஃபின் போன்ற பொருட்கள் உள்ளன. லெமன் டீ அவ்வளவு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் பால் தேநீர் குடிப்பது தீங்கு விளைவிக்கும். இதனால் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் ஏற்படுகிறது. அதிகமாக டீ குடிப்பதால் செரிமான பிரச்சனைகள் ஏற்படும்.

இதன் காரணமாக, உடல் அசௌகரியம், குமட்டல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.தேநீர் பிரியர்கள் பெரும்பாலும் ஸ்ட்ராங்கான மற்றும் சூடான தேநீர் குடிக்க விரும்புகிறார்கள். சூடான தேநீர் உடலின் உள் உறுப்புகளில் மோசமான விளைவை ஏற்படுத்துகிறது. இது புண்களை உருவாக்கும் அபாயத்தை அதிகரிக்கிறது.

ஏற்கனவே அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் அதிக தேநீர் அருந்தக்கூடாது.அதிக தேநீர், எலும்புகளை சேதப்படுத்தும். மூட்டு வலி போன்ற பிரச்சனைகளை உண்டாக்கும். இரவு நேரத்தில் தேநீர் அருந்துவது உங்கள் தூக்கத்தை குறைத்து, எரிச்சலையும் கோபத்தையும் அதிகரிக்கும்.அதிக டீ குடிப்பதால் பசியை அடக்கலாம். வெறும் வயிற்றில் தேநீர் அருந்தினால், காஃபின் இரத்தத்தில் விரைவாக உறிஞ்சப்படுகிறது. இது சில நேரங்களில் மன சிக்கல்கள், பிபி தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது. எனவே குறைந்த அளவு டீ குடிக்கவும், வெறும் வயிற்றில் டீ குடிக்க வேண்டாம்

Recent News