கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சி தகவலொன்று வெளியாகியுள்ளன.
இதன் காரணமாக சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் தொலைபேசியை எடுத்துச்செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கழிவறை இருக்கையை விட 10 சதவீத பாக்டீரியாக்கள் நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுவதாக அரிசோனா பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
டிஜிட்டல் திரைகளுக்கு அடிமை
மேலும், டிஜிட்டல் திரைகளுக்கு அடிமையாகிய மனிதர்கள், தொழில்நுட்ப ரீதியிலான சிக்கல்களுக்கு பாதிக்கப்பட்டு எதிர்காலத்தில் பல இன்னல்களுக்கு உள்ளவாதக் கண்டறியப்பட்டுள்ளது.
எதிர்காலத்தில் மனிதர்கள் குனிந்த முதுகு, நகம் போன்ற கைகள் மற்றும் டிஜிட்டல் திரைகளில் இருந்து வெளியாகும் ஒளியில் இருந்து நம் கண்களைப் பாதுகாக்க, கண்களில் கூடுதலாக இரண்டாவது கண் இமை கொண்டு புதிய உடல் வடிவம் கொண்ட மனிதர்களாக நாம் மாறிவிடுவோம் என்று ஆராய்ச்சியாளர்கள் கணித்துள்ளனர்.
பிற செய்திகள்