Wednesday, January 8, 2025
HomeLatest Newsமக்களின் எழுச்சிக்கு இடையூறு விளைவிக்காதீர்கள்! – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

மக்களின் எழுச்சிக்கு இடையூறு விளைவிக்காதீர்கள்! – சட்டத்தரணிகள் சங்கம் எச்சரிக்கை

மக்களின் அமைதியான போராட்டத்தை சீர்குலைக்கும் முயற்சி நாட்டிற்கு பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும் என இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் எச்சரித்துள்ளது.

எனவே இவ்வாறான நடவடிக்கைகள் எடுப்பதைத் தவிர்க்குமாறு இலங்கை அரசாங்கத்திற்கு அச்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.

காலி முகத்திடலுக்கு அருகாமையில் குவிக்கப்பட்ட பல பொலிஸ் வாகனங்கள், அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டும் அகற்றப்படவில்லை.

இந்த நாட்டு மக்களின் அமைதியான போராட்டம் எதுவாக இருந்தாலும், அதனை எந்த வகையிலும் சீர்குலைக்கும் முயற்சியை கண்டிப்பதாக கூறியுள்ளது.

மேலும் அத்தகைய முயற்சி நாடு, ஜனநாயகம், அதன் பொருளாதாரம் மற்றும் சட்டத்தின் ஆட்சி ஆகியவற்றிற்கு கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அச்சங்கம் எச்சரித்துள்ளது.

Recent News