Wednesday, May 15, 2024
HomeLatest Newsமீனுக்கு கால் இருக்கா? பனி மேல் நடக்கும் அதிசய மீன்!

மீனுக்கு கால் இருக்கா? பனி மேல் நடக்கும் அதிசய மீன்!

பனி சூழ்ந்துள்ள பிரதேசத்தில் நடந்துச் செல்லும் அதிசய மீனின் வீடியோக்காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பனி பிரதேசத்தில் உயிரினங்கள் வாழ்வது என்பது மிகவும் அரியதான ஒரு விடயம். மேலும் ஆராய்ச்சியாளர்கள் இவ்வாறு தேடிச்செல்லும் போது பனிக்கரடிகளே அதிகளவில் மனிதக் கண்களுக்குள் மாட்டுப்படுகிறது.

இது போன்ற ஆராய்ச்சியாளர்களை பார்த்து இது தொடர்பாக வினவினால் இந்த உலகில் நமக்கு தெரியாத பல விடயங்கள் இருப்பதாக கூறுவார்கள். அந்தளவு உலகம் அதிசயமான படைப்புகளால் நிரப்பட்டுள்ளது.

இதன்படி, பனிப்பிரதேசம் ஒன்றில் கடலில் இருந்து வெளியே வந்த மீன் பனிக்கட்டிகள் மீது நடக்கிறது. பொதுவாக மீன்கள் என்றாலே சேட்டைகளுடன் நீந்தும் ஆற்றல் கொண்டு காணப்படும்.

நிலத்தில் வைத்தால் அது வாழ்வதற்கான ஒரு சூழல் இல்லாமல் இறந்து விடும். ஆனால் வீடியோவில் நாம் காணும் மீன், தண்ணீருக்கு மேல் வந்ததுடன் பனியில் மேல் நின்று கொண்டிருக்கிறது.

இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ ஆராய்ச்சியாளர் ஒருவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த நெட்டிசன்கள் மீனைப் பார்த்து வியப்படைந்துள்ளார். மேலும் மீன்களுக்கு கால்கள் உண்டா? சுவாரஸ்யமான கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

Recent News