Thursday, January 23, 2025
HomeLatest NewsWorld Newsதிடீர் கோடிஸ்வரர் எமனாக மாறிய அதிஸ்டம்பதறிப்போன ஊழியர்கள்!!!

திடீர் கோடிஸ்வரர் எமனாக மாறிய அதிஸ்டம்பதறிப்போன ஊழியர்கள்!!!

சிங்கப்பூரில் உள்ள கேசினோ ஒன்றில் 4 மில்லயன் டாலர்களை வென்ற நபர் ஒருவர் இன்ப அதிர்ச்சியில் வெற்றி பெற்ற சிறிது நேரத்திலேயே கேசினோவில் வைத்தே மாரடைப்பு ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சிங்கப்பூரில் புகழ் பெற்று விளங்கும் மரினா பே சாண்ட்ஸ் கேசினோவில் விளையாடிய அந்த நபர் 4 மில்லியன் டாலர்களை வென்றுள்ளார்.

இதனால் இன்ப அதிர்ச்சிக்கு ஆளான அவர் திடீரென சுருண்டு விழுந்தார். பதறிய கேசினோ ஊழியர்கள் எவ்வளவோ முயன்றும் அவரைக் காப்பாடற்ற முடியவில்லை. அவரது இறப்புக்கு அதீத அதிர்ச்சியினால் மாரடைப்பு ஏற்ப்பட்டதே காரணம் என பின்னர் தெரியவந்துள்ளது.அந்த நபர் சுருண்டு விழுந்ததும் அவரைக் காப்பாற்ற அருகில் உள்ளவர்கள் பதறும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதிர்ஷ்டம் எப்போதாவது சிலருக்கு மட்டுமே வரும் நிலையில் அப்படி ஏற்பட்ட அதிர்ஷ்டமே அந்த நபருக்கு எமனாக முடிந்தது என்பது அபத்தமான உண்மையாக மாறியுள்ளது.

Recent News