Sunday, January 26, 2025
HomeLatest Newsஉலகின் ஆழமான நீல ஓட்டை கண்டுபிடிப்பு..!

உலகின் ஆழமான நீல ஓட்டை கண்டுபிடிப்பு..!

உலகின் 2 வது ஆழமான நீல ஓட்டை மெக்சிகோவில் உள்ள யுகடன் தீபகற்பத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இது 147,000 சதுர அடி பரப்பளவிலும், 900 அடி ஆழத்திலும் பரந்து விரிந்துள்ளதுடன் இதற்கு ‘தாம் ஜா’ என்று பெயரிடப்பட்டுள்ளது.

கடல் தரையில் பொறிக்கப்பட்ட பழங்கால சுண்ணாம்புக் குகைகள் நீல துளைகளில் காணப்படுவதுடன், நீல ஓட்டைகள் இருண்ட நிறத்தில் இருப்பதுடன் இதன் மேற்பரப்பு ஈரநிலங்களை விட சற்று அதிகமாக உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

கிட்டத்தட்ட 80 டிகிரி சரிவுகளுடன் செங்குத்தான பக்கங்களைக் கொண்டுள்ளது, மேலும் குகையின் வாய் கடல் மட்டத்திலிருந்து 15 அடி கீழே அமைந்துள்ளது. இதில் “ஆழமான நீர்” குறைந்தபட்ச ஆக்ஸிஜன் அளவு காணப்படுகின்றது.

மேலும் சூரிய ஒளி மட்டுமே மேற்பரப்பில் இருப்பதுடன், தற்போது தென் சீனக் கடலில் உள்ள டிராகன் ஹோலுக்குப் பின்னர் உலகில் 2வது ஆழமான நீல துளை என்ற சிறப்பினை பெறுகின்றது.

அத்துடன் இதன் பள்ளம் சுமார் 980 அடிக்கு கீழே நீண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Recent News