Friday, December 27, 2024
HomeLatest Newsஅமேசோனில் காணாமல் போனோர் சடலங்களாக கண்டு பிடிப்பு!

அமேசோனில் காணாமல் போனோர் சடலங்களாக கண்டு பிடிப்பு!

கடந்த 5ம் திகதி அமெசோன் காட்டுப் பகுதியில் ஐவாரி என்ற பள்ளத்தாக்கிற்கு சுற்றலா சென்ற பிரித்தானிய ஊடகவியலாளர் பிலிப்ஸ் மற்றும் உள்விவகாரங்களில் நிபுணத்துவம் வாய்ந்தவரான புரூனோ பெரேரா ஆகியோர் நேற்றைய தினம் சடலங்களாக கண்டு பிடிக்கப்பட்டதாகவும், இருவருடைய பற்களையும் வைத்து அவர்களுடைய உடல்கள் தான் உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர்களுடைய மரணத்திற்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை என்றும், பிலிப்ஸ் னுடைய சகோதரர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் பிரேசில் அரசு தெரிவித்துள்ளது.

காணாமல் போய் தற்போது சடங்களாக கண்டு பிடிக்கப்பட்ட மேற்படி இருவரின் மரணத்திற்கு நீதி வேண்டி இருவருடைய குடும்ப உறுப்பினர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Recent News