Tuesday, December 24, 2024
HomeLatest Newsவெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சலுகைகள்! ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அறிவிப்பு

வெளிநாடு செல்லும் மாணவர்களுக்கு சலுகைகள்! ஸ்ரீலங்கன் எயார் லைன்ஸ் அறிவிப்பு

வெளிநாடுகளுக்கு கற்கை நெறியை மேற்கொள்ளும் வகையில் மாணவர் விசா வைத்திருப்பவர்களுக்கு விமானத்தின் இணையதளம் மூலம் நேரடியாக முன்பதிவு செய்யும் பல பிரத்தியேக நன்மைகளை சிறிலங்கன் எயார் லைன்ஸ் அறிமுகப்படுத்தியுள்ளது.

இதன்படி மாணவர்கள் விசாவுடன் சிறிலங்கன் ஏர்லைன்ஸில் பயணிக்கும் போது கட்டணச்சலுகைகள் மற்றும் அதிகப்படியான பொருள் வசதிகள் மற்றும் சேமிப்புகளை அனுபவிக்க முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் தங்கள் முதல் விமான டிக்கெட் வாங்கும் போது உடனடி 10 சதவீத கட்டணச்சலுகை மற்றும் சுய பயணத்திற்காக ஐந்து டிக்கெட்டுகள் வரை வாங்கும் ஒவ்வொரு கூடுதல் டிக்கெட்டின் மீதும் 15 சதவீத கட்டணச்சலுகையை பெறுவார்கள். கூடுதலாக, மாணவர்களின் பெற்றோர்கள் மற்றும் வாழ்க்கைத் துணைவர்கள் வெளிநாட்டில் படிக்கும் மாணவர்களைப் பார்க்க டிக்கெட் வாங்கும் போது ஐந்து சதவீத கட்டணச்சலுகையை பெற தகுதியுடையவர்களாவர்.

கொழும்பிலிருந்து சர்வதேச நகரங்களுக்குப் பயணிக்கும் மாணவர்கள் கல்விக்காக வேறொரு நாட்டிற்கு இடம்பெயர்வது என்பது மாணவர்களுக்கு அடிக்கடி மன உளைச்சல் மற்றும் மன அழுத்த அனுபவமாக இருக்கும். மாற்றத்தின் போது ஒரு மாணவர் எதிர்கொள்ளக்கூடிய பல சவால்களில், விமானத்தில் கொண்டு செல்லும் பொருட்களும் உள்ளடங்குகின்றது.

இந்த பொதுவான சவாலுக்கு விடையிறுக்கும் வகையில், சிறிலங்கன் எயார்லைன்ஸ் ஒவ்வொரு வகுப்பு பயணத்தின் வழக்கமான கிலோகிராமுக்கு மேலதிகமாக 10 கிலோ கிராம் பொருட்களை எடுத்துச்செல்ல அனுமதிக்கிறது.

மாணவர்கள் சுய பயணத்திற்காக வாங்கும் ஒவ்வொரு டிக்கெட்டிலும் ஒரு திகதி மாற்றத்திற்கான சலுகையையும் பெறுவார்கள். வருடாந்தம் சுமார் 25,000 இலங்கையர்கள் வெளிநாடுகளுக்கு உயர்கல்வியை நாடுகின்றனர்.

சிறிலங்கன் ஏர்லைன்ஸ், கொழும்பில் இருந்து சர்வதேச நகரங்களுக்குப் பயணிக்கும் மாணவர்களில் பெரும்பாலானோரை தனது வலையமைப்பிற்குள் கொண்டு செல்வதுடன், இலங்கை சர்வதேச மாணவர் மக்களிடையே விமான சேவையை சிறந்த விமான சேவையாளராக மாற்றியுள்ளதாக சிறிலங்கன் எயார்லைன்ஸ் குறிப்பிட்டுள்ளது.

Recent News