Tuesday, December 24, 2024
HomeLatest Newsசுவிட்ஸர்லாந்தில் 50 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு..!

சுவிட்ஸர்லாந்தில் 50 கோடிக்கு ஏலம் போன டைனோசர் எலும்புக்கூடு..!

சுமார் 6.7 கோடி ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த டைனோசரின் எலும்புக்கூடு கடந்த சில தினங்களிற்கு முன்னர் சுவிட்ஸர்லாந்தில் ஏலம் விடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவில் இதுபோன்ற டைனோசர் எலும்புக் கூட்டை ஏலம் விடுவது இதுவே முதல் முறை என்றும், இது நன்கு பாதுகாக்கப்பட்ட மற்றும் அற்புதமாக மீட்டெடுக்கப்பட்ட புதைபடிவம் என்றும் ஏல நிறுவனம் கூறியுள்ளது.

இது அமெரிக்காவிலுள்ள 3 புதைபடிம ஆய்வு தளங்களில் இருந்து டிரனாசோரஸ் ரெக்ஸ் (டி-ரெக்ஸ்) என்ற வகையைச் சேர்ந்த டைனோசரின் சுமார் 300 எலும்புகள் கண்டெடுக்கப்பட்ட நிலையில், அனைத்தும் ஒரே எலும்புக்கூடாக வடிவமைக்கப்பட்டுள்ளன.

டிரினிட்டி என்று பெயரிடப்பட்டுள்ள எலும்புக்கூடு மொத்தம் 11.6 மீட்டர் நீலமும், 3.9 மீட்டர் உயரமாகவும் காணப்பட்டுள்ளது.

குறித்த எலும்புக்கூடு 6.1 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (சுமார் ரூ.50 கோடி) ஏலத்தில் விடப்பட்டுள்ளதுடன், ஐரோப்பாவைச் சேர்ந்த தனியார் பழம்பொருள் சேகரிப்பாளர் ஒருவரே இதனை வாங்கியதாகவும் கூறப்பட்டுள்ளது.

Recent News