Tuesday, December 24, 2024
HomeLatest Newsதனுஷ்க குணதிலகவின் வீடியோ வெளியானது - பொலிசாரிடம் சிக்கிய "பென் ட்ரைவ்"

தனுஷ்க குணதிலகவின் வீடியோ வெளியானது – பொலிசாரிடம் சிக்கிய “பென் ட்ரைவ்”

இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்க குணதிலக்கவின் பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யுமாறு கோருவதற்கு ஒரு நாள் முன்னதாகவே அவருக்கு எதிரான பொலிஸ் வழக்கின் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளதாக அவுஸ்திரேலிய ஊடகமான News.com.au செய்தி வெளியிட்டுள்ளது.

31 வயதான அவர், அனுமதியின்றி உடலுறவு கொண்டதாக நான்கு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் ,சிட்னி ரயில் நிலையத்தில் இருந்து சி.சி.டி.வி காட்சிகள் உள்ளிட்ட கோப்புகளைக் கொண்ட யூ.எஸ்.பி.யை கிரிக்கெட் வீரரின் தரப்பு வழக்கறிஞர்கள் அணுகியதால், வழக்கின் புதிய விவரங்கள் வெளிவந்தன.

இரவு 11 மணியளவில் சிட்னியின் கிழக்குப் புறநகரில் உள்ள பெண்ணின் வீட்டிற்குச் செல்வதற்கு முன், இருவரும் நகரத்தில் மது அருந்தியதாக போலீஸார் குற்றம் சாட்டுகின்றனர்.

இந்த ஜோடி படுக்கையறைக்கு சென்றபோது ,பெண் அசௌகரியமாக இருந்ததாகவும், ஆணுறை அணிந்திருந்தால் மட்டுமே பாலுறவில் ஈடுபட சம்மதித்ததாகவும் பொலிஸார் கூறுகின்றனர்.

அத்துடன் தடுத்து வைக்கப்பட்டுள்ள,தனுஷ்க  பிணை நிபந்தனைகளை மறுபரிசீலனை செய்யக்கோரி சிட்னி டவுனிங் சென்டர் உள்ளூர் நீதிமன்றத்திற்கு வியாழக்கிழமை செல்வார் என தெரிவிக்கப்படுகிறது.
 

Recent News