Thursday, May 15, 2025
HomeLatest Newsஅரசியலில் இருந்து விடைபெறும் தம்மிக்க பெரேரா!

அரசியலில் இருந்து விடைபெறும் தம்மிக்க பெரேரா!

நாடாளுமன்ற உறுப்பினர் தம்மிக்க பெரேரா நாளை (21) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் நிதியமைச்சர் பெசில் ராஜபக்ச தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்ததையடுத்து வெற்றிடமாகிய நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்கு தம்மிக்க பெரேரா கடந்த ஜூன் மாதம் 22 ஆம் திகதி நாடாளுமன்றத்திற்கு பிரவேசித்தார்.

பின்னர், ஜூன் 24ஆம் திகதி முதலீட்டு மேம்பாட்டு அமைச்சராகப் பதவியேற்ற அவர், ஜூலை 10ஆம் திகதி இராஜினாமா செய்தார். 16 நாட்கள் குறுகிய காலமே அமைச்சராக பதவி வகித்தார்.

8ஆவது நிறைவேற்று ஜனாதிபதியை தெரிவு செய்வதற்காக இன்று முற்பகல் தம்மிக்க பெரேராவும் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவில் கலந்துகொண்டிருந்தார்.

Recent News