Tuesday, December 24, 2024
HomeLatest Newsஅதிக மற்றும் குறைந்த சம்பளத்தை வழங்கப்போகும் நாடுகளின் விபரங்கள்!

அதிக மற்றும் குறைந்த சம்பளத்தை வழங்கப்போகும் நாடுகளின் விபரங்கள்!

2023 ஆம் ஆண்டில் உலகில் அதிக சம்பள உயர்வை வழங்கும் நாடாக இந்தியா விளங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆகக் குறைந்த சம்பள உயர்வை வழங்கப்போகும் நாடுகளில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் பணவீக்கத்தின் மத்தியிலும் 2023 ஆம் ஆண்டில் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக சம்பள உயர்வில் இந்தியா முதல் இடத்தை வகிக்கவுள்ளதாக ப்ளூம்பெர்க் கணக்கெடுப்பு ஆய்வில் தெரியவந்துள்ளது.

68 நாடுகள் மற்றும் நகரங்களில் உள்ள 360 க்கும் மேற்பட்ட பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து சேகரிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் இந்த முடிவு வெளியிடப்பட்டுள்ளது.

ஐரோப்பாவிலும் குறைவான சம்பள உயர்வுகளே வழங்கப்படும் என்றும் அமெரிக்காவில் 1 சதவிகித சம்பள உயர்வே இருக்கும் என்றும் ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவிலும் 2023ஆம் ஆண்டில் சம்பள உயர்வின் விகிதம் வீழ்ச்சியடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், உண்மையான சம்பளம் உயரும் என்று முன்னறிவிக்கப்பட்ட முதல் 10 நாடுகளில் எட்டு நாடுகளில் ஆசிய நாடுகள் உள்ளன.

இதில் முதல் இடத்தை 4.6 வீத உயர்வு என்ற அடிப்படையில் இந்தியாவும், 4.0 சதவீத உயர்வின் கீழ் வியட்நாமும் மற்றும் 3.8 சதவீதம் உயர்வுடன் சீனாவும் பட்டியலிடப்பட்டுள்ளன.

2023 சம்பள உயர்வு பட்டியலின்படி வகைப்படுத்தப்பட்ட நாடுகள் –

இந்தியா (4.6 சதவீதம்)
வியட்நாம் (4.0 சதவீதம்)
சீனா (3.8 சதவீதம்)
பிரேசில் (3.4 சதவீதம்)
சவுதி அரேபியா (2.3 சதவீதம்)
மலேசியா (2.2 சதவீதம்)
கம்போடியா (2.2 சதவீதம்)
தாய்லாந்து (2.2 சதவீதம்)
ஓமன் (2.0 சதவீதம்)
ரஷ்யா (1.9 சதவீதம்)

அதேநேரம் சம்பள குறைவு பட்டியலின்படி, வகைப்படுத்தப்பட்ட நாடுகள்-

பாகிஸ்தான் (-9.9 சதவீதம்)
கானா (-11.9 சதவீதம்)
துருக்கி (-14.4 சதவீதம்)
இலங்கை (-20.5 சதவீதம்)
அர்ஜென்டினா (-26.1 சதவீதம்)

Recent News