Thursday, January 23, 2025
HomeLatest Newsநிதிச்சரிவுக்கு மத்தியிலும் வீதிகள் அமைப்புக்கு அதிக பணம் செலவு!

நிதிச்சரிவுக்கு மத்தியிலும் வீதிகள் அமைப்புக்கு அதிக பணம் செலவு!

வடகொரியா நேற்றைய தினம் மிகவும் கடுமையான அறிக்கையொன்றினை அமெரிக்காவின் உயரதிகாரிக்கு எதிராக வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாய்வானுக்கான தனது பயணத்தை நிறைவு செய்த அமெரிக்க உயரதிகாரி ‘நான்சி பிலோமி’ தென் கொரியாவின் ‘சியோல்’ பகுதிக்கு பயணம் செய்ததுடன் தென்கொரியா மற்றும் வட கொரியாவிற்குமிடையிலான எல்லைப் பகுதியான JAS என்னும் இராணுவமயமாக்கப்பட்ட பகுதியையும் சென்று பார்வையிட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த செயற்பாட்டினால் கொதித்தெழுந்த வடகொரியா, ‘நான்சி பிலோமியை’ “சர்வதேச சமாதானத்திற்கு கேடு விளைவிக்கும் பிசாசு” என அவரை வர்ணித்து மேற்படி அறிக்கையினை வெளியிட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

2019ம் ஆண்டில் அப்போதைய அதிபர் ‘டொனால் ட்ரம்ப்’ மேற்படி பகுதிக்கு சென்றதற்குப் பின்னர் நான்சி பிலோமி; தான் இவ் எல்லைப் பகுதிக்கு பயணம் மேற்கொண்ட உயரதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் நான்சி பிலோமியின் வருகைக்கு முற்றும் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருந்த வடகொரியா, “அமெரிக்கா தேவையில்லாமல் வேண்டிக் கட்டப் போகின்றது என்றும், அமெரிக்காவிற்கு கொடி பிடிக்கும் தென்கொரியா ஒரு நாள் உணர்ந்து கொள்ளும் எனவும் தெரிவித்துள்ளது.

JAS என்ற எல்லைப் பகுதியில் இரு நாடுகளும் சுமார் 250 கிலோ மீற்றர் பகுதியை பகிர்ந்து கொண்டிருக்கும் அதேவேளை மேற்படி பகுதியில் இரு நாட்டு இராணுவமும் அத்தடன் அமெரிக்கா தலைமையிலான ஐக்கிய நாடுகளின் சமாதானப் பிரிவு இராணுவமும் நேருக்கு நேர் நிலைகொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Recent News