குடும்ப வறுமை காரணமாக தனது 8 மாத பெண் குழந்தையை 800 ரூபாய்க்கு விற்பனை செய்த பழங்குடியின பெண்ணை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இச்சம்பவம் ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ஜா மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியை சேர்ந்த பழங்குடியின பெண் கராமி முர்முவின் கணவர் முசு தமிழ்நாட்டில் வேலை செய்து வருகின்றார்.
இந்நிலையில், மனைவி கராமி முர்முவுக்கு சமீபத்தில் இரண்டாவது பெண் குழந்தை பிறந்துள்ளது. ஆயினும், தமது குடும்ப வறுமை காரணமாக அந்த குழந்தையை வளர்க்க முடியாது என்று கராமி முர்மு எண்ணியுள்ளார்.
அதனால், அந்த பெண் குழந்தையை தனது கணவருக்கு தெரியாது குழந்தை இல்லாத தம்பதிக்கு ஒன்றுக்கு 800 ரூபாய்க்கு விற்றுள்ளார்.
இதற்கிடையில், சொந்த ஊருக்கு திரும்பிய கணவர், புதிதாக பிறந்த 2 ஆவது குழந்தை பற்றி மனைவியிடம் கேட்க, அதற்கு அவர் குழந்தை இறந்துவிட்டதாக பொய் கூறியுள்ளார்.
ஆயினும், சந்தேகமடைந்த முசு இது குறித்து பொலிஸாரிடம் புகாரளித்துள்ளார்.
அதனை தொடர்ந்து, பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் இரண்டாவது குழந்தை 800 ரூபாய்க்கு குழந்தையில்லாத தம்பதி ஒன்றுக்கு விற்கப்பட்டமை தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, குழந்தையின் தாய் கராமி முர்மு, அதை வாங்கிய தம்பதி மற்றும் அதற்கு ஏற்பாடு செய்த நபர் ன்று 4 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்து வருகின்றனர்.